×

நீட் தேர்வால் தொடரும் பலி! மேலும் ஒரு மாணவி தற்கொலை!!

விழுப்பரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ குப்பத்தில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி மோனிஷா வீட்டில் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். விழுப்பரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ குப்பத்தில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி மோனிஷா வீட்டில் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீட் தேர்வு மருத்துவ படிப்பில் சேர விரும்பும், அனைத்து மாணவர்களும் எழுத வேண்டிய தேர்வு. 2017ஆம் ஆண்டு முதல் மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டிருக்கும்
 

விழுப்பரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ குப்பத்தில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி மோனிஷா வீட்டில் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

விழுப்பரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ குப்பத்தில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி மோனிஷா வீட்டில் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நீட் தேர்வு மருத்துவ படிப்பில் சேர விரும்பும், அனைத்து மாணவர்களும் எழுத வேண்டிய தேர்வு. 2017ஆம் ஆண்டு முதல் மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் இந்த தேர்வு, 2013ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டதாலும், வேறு சில காரணங்களாலும், இந்த தேர்வை 2013 ஜூனில் தடை செய்து விட்டனர். அதனை தொடர்ந்து இப்போது 2017ல் மீண்டும் இந்த தேர்வு நடத்தப்பட்டது. 2017ல் தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அதில் மொழிப்பெயர்ப்பு சரியான முறையில் இல்லாததால், மாணவர்களால் அந்த தேர்வை சரியாக எழுத முடியவில்லை. மேலும் இந்த நீட் தேர்வில், சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்படும்.

இதனால் மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இந்த நீட் தேர்வு மிகப்பெரிய சவாலாக அமைகிறது. மருத்துவம் படிப்பதை கனவாக கொண்டிருந்த பெரும்பாலான மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் 1200க்கு 1175 மதிப்பெண்கள் எடுத்த, அனிதா என்ற மாணவி நீட் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார்.  இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபா எனும் மாணவி, நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த நம்புராஜன் என்பவருடைய மகள் வைஷியாயும், திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் செல்வராஜ் ராஜலட்சுமி தம்பதியின் மகள் ரிதுஸ்ரீ என்பவரும் தற்கொலை செய்து உயிரிழந்தனர். இன்று விழுப்பரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ குப்பத்தில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி மோனிஷா வீட்டில் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.