×

நிவாரண பணிகளுக்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் அதிரடி உத்தரவு

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு 1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னை: கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு 1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்த போது தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை உருக்குலையச் செய்துள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தண்ணீருக்கும், உணவுக்கும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
 

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு 1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை: கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு 1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்த போது தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை உருக்குலையச் செய்துள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தண்ணீருக்கும், உணவுக்கும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட தற்போது வரை முழுமையாக சென்றடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண்கள், அவர்களுக்கு உதவ முடியாத கையறு நிலையில் ஆண்கள் என டெல்டா மக்கள் பெரும் சிரமத்தில் இருந்து வருகின்றனர். இது தொடர்பான நிவாரண உதவிகளை தமிழக அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கஜா புயலால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்கியுள்ள குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் உடனடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் கஜா புயலால் சேதமடைந்த குடிசை விடு ஒன்றுக்கு தலா ரூ.10,000 இழப்பீடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு ரூ.42000 வழங்கப்படும். பகுதியாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4100; முழுவதும் சேதமடைந்த எஃப்ஆர்பி படகுகள் மற்றும் வலைக்கு ரூ.85000 வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.