×

நினைத்தாலே பதறுதே… தமிழகத்திற்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து… இது மழையால் இல்லையாம் மக்களே..!

ஃபனி புயல் தமிழகத்துக்கு வராவிட்டாலும் தமிழகத்துக்கு அருகே வந்தால் கொஞ்சம் மழையோ அல்லது மேக மூட்டமோ ஏற்படும். இதனால் நாம் தப்பிவிடுவோம்’’ எனக் கூறி இருந்தார். தமிழகத்தை மழை தாக்குமா? வெப்பம் தகிக்குமா? என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த கெடு முடிந்து விட்டதால் அவர் அஞ்சியது போலவே தமிழகம் மாபெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. மழை வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், இந்தப்புயல் தமிழக கடற்கரையை விட்டு விலகி செல்லும்போது தமிழகம் மிகவும் ஆபத்தை
 

ஃபனி புயல் தமிழகத்துக்கு வராவிட்டாலும் தமிழகத்துக்கு அருகே வந்தால் கொஞ்சம் மழையோ அல்லது மேக மூட்டமோ ஏற்படும். இதனால் நாம் தப்பிவிடுவோம்’’ எனக் கூறி இருந்தார்.

தமிழகத்தை மழை தாக்குமா? வெப்பம் தகிக்குமா? என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த கெடு முடிந்து விட்டதால் அவர் அஞ்சியது போலவே தமிழகம் மாபெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. 

மழை வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், இந்தப்புயல்  தமிழக கடற்கரையை விட்டு விலகி செல்லும்போது தமிழகம் மிகவும் ஆபத்தை சந்திக்க போகிறது என தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகத்தில் மழையை உருவாக்கும் என சென்னை வானிலை மையம் இரு தினங்களுக்கு அறிவித்து இருந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று  ஃபனி புயலாக உருமாறும் எனக் கூறப்பட்டது. இந்த புயல் நாளை தீவிர புயலாக மாறி 30-ஆம் தேதி வடதமிழகம்- ஆந்திரா இடையே நெருங்குவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில், ’’மழை வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், தமிழக கடற்கரையை விட்டு விலகி செல்வது பெரும் ஆபத்தானது. உண்மையாக நம்ம மக்கள் பாவம்.

அதற்கு  இந்த ஃபானி புயல் வராமலேயே இருந்திருக்கலாம். சென்னையில் கடந்த 200 ஆண்டுகளில் இருமுறை அதிக வெப்பம் காரணமாக புயல்கள் வேறு திசையில் சென்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. அதன்படி 2003- ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி பர்மாவுக்கு புயல் சென்றது. இதனால், அதிக வெப்பம் 45 டிகிரி செல்சியல் தகித்ததால் இந்தியாவில் வெப்பக்காற்றால் 1000 பேர் பலியாகிவிட்டனர்.

அது போல் 1998-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி மீண்டும் ஒரு முறை புயலானது பர்மாவுக்கு நகர்ந்து சென்றது. இதனால் அங்கு 44.1 டிகிரி வெப்பம் அதிகரித்தது. அப்போது இந்தியா முழுவதும் வீசிய அனல் காற்றால் 2500 பேர் பலியாகிவிட்டனர். ஃபானி புயலால் அனல் காற்று வீசுமா?  இல்லை தெறிக்க விடும் கனமழை வீசுமா என்பது நாளை தெரிந்து விடும்.

ஃபனி புயல் தமிழகத்துக்கு வராவிட்டாலும் தமிழகத்துக்கு அருகே வந்தால் கொஞ்சம் மழையோ அல்லது மேக மூட்டமோ ஏற்படும். இதனால் நாம் தப்பிவிடுவோம்’’ எனக் கூறி இருந்தார்.

இந்தப்பதிவை அவர் நேற்று நள்ளிரவு பதிவிட்டு இருந்தார். வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன கெடு முடிவடைந்து விட்டது. இன்று மழை பெய்யவில்லை. மேக மூட்டமும் காணப்படவில்லை. வழக்கத்திற்கு மாறாக கடும் வெயில் அதிகரித்து கொழுத்தி எடுக்கிறது. ஆகையால் வெப்பக்காற்றால் தமிழகம் பெரும் ஆபத்தை சந்திக்கலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.