×

நிஜமாவே நம்ம காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு அடுத்தவங்கதான்!

சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவணக் காப்பக ஆய்வாளர் தாஹிரா தலைமயிலான போலீசார் மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து ஆதரவு இல்லங்களில் தங்கியிருப்பவர்களை மீட்டு ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் 3 ஆண்டுகளாக உள்ள ராஜ்குமார் மல்லிக்குக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை அடுத்து அவருக்கு சுய நினைவு திரும்பி தனது பெயர் தனது கிராமத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களை கூறியதாகக் கூறப்படுகிறது. ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் சோரா
 

சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவணக் காப்பக ஆய்வாளர் தாஹிரா தலைமயிலான போலீசார் மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து ஆதரவு இல்லங்களில் தங்கியிருப்பவர்களை மீட்டு ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் 3 ஆண்டுகளாக உள்ள ராஜ்குமார் மல்லிக்குக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை அடுத்து அவருக்கு சுய நினைவு திரும்பி தனது பெயர் தனது கிராமத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களை கூறியதாகக் கூறப்படுகிறது.

ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் சோரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மல்லிக். இவர் 24 ஆண்டுகளுக்கு முன் 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது தனது தந்தையையும் அதைத் தொடர்ந்து தாயையும் இழந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக அவரை தேடிய உறவினர்கள், அவர் கிடைக்காததால் இறந்திருக்கக் கூடும் என கருதி தேடுவதை கைவிட்டுவிட்டனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவணக் காப்பக ஆய்வாளர் தாஹிரா தலைமயிலான போலீசார் மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து ஆதரவு இல்லங்களில் தங்கியிருப்பவர்களை மீட்டு ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் 3 ஆண்டுகளாக உள்ள ராஜ்குமார் மல்லிக்குக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை அடுத்து அவருக்கு சுய நினைவு திரும்பி தனது பெயர் தனது கிராமத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களை கூறியதாகக் கூறப்படுகிறது.

உடனடியாக ஒடிசா போலீசாரை தொடர்பு கொண்ட மாநில குற்ற ஆவணக் காப்பக போலீசார், ராஜ்குமார் மல்லிக் என்ற பெயரில் காணாமல் போனவர்கள் குறித்த புகார் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்த போது 1995-ஆம் ஆண்டில் அவர் மாயமானதாக புகார் பதிவானது தெரியவந்தது. இதையடுத்து சோரா கிராம போலீசார் ராஜ்குமாரின் உறவினர்களை தொடர்பு கொண்டு, அவர் தமிழகத்தில் இருப்பது குறித்து தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தமிழகம் வந்த ராஜ்குமாரின் உறவினர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்த சுமார் 200 பேர் மீண்டும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநில குற்ற ஆவணக் காப்பக ஆய்வாளர் தாஹிரா தெரிவித்தார்.