×

நாளை முதல் சென்னை புறநகர் ரயில் சேவைகளில் பொதுமக்களுக்கு அனுமதி?!

நாளை முதல் சென்னை புறநகர் ரயில் சேவைகளில் பொதுமக்கள் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அத்தியாவசிய பணிகளில் உள்ளவர்கள் மற்றும் பெண்கள், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் புறநகர் ரயில்களில் Non peak hours எனப்படும் கூட்ட நெரிசல் குறைவாக உள்ள நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்ய அனுமதிக்கபட உள்ளனர். காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி
 

நாளை முதல் சென்னை புறநகர் ரயில் சேவைகளில் பொதுமக்கள் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அத்தியாவசிய பணிகளில் உள்ளவர்கள் மற்றும் பெண்கள், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை முதல் புறநகர் ரயில்களில் Non peak hours எனப்படும் கூட்ட நெரிசல் குறைவாக உள்ள நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்ய அனுமதிக்கபட உள்ளனர். காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையிலும் peak hours ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து மற்ற நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். Non peak hours தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்பே டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் தரப்படும், மேலும் பயணிகள் அனைவரும் ஒரு வழி டிக்கெட் மட்டுமே கவுண்டரில் பெற முடியும்

கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் பொதுமக்கள் பயணம் செய்வதை கண்காணிப்பதற்காக, டிக்கெட் பரிசோதகர் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பார்கள் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.