×

நாமக்கல்: பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்த விவசாயி – மக்கள் அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் தன்னை கடித்த பாம்புடன் விவசாயி ஒருவர் அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் தன்னை கடித்த பாம்புடன் விவசாயி ஒருவர் அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள குள்ளப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி. மேலும் இவர் ஆடுமேய்க்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், வழக்கம்போல ராமசாமி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அவரை கட்டுவிரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து அந்த பாம்பை விடாமல்
 

நாமக்கல் மாவட்டத்தில் தன்னை கடித்த பாம்புடன் விவசாயி ஒருவர் அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் தன்னை கடித்த பாம்புடன் விவசாயி ஒருவர் அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள குள்ளப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி. மேலும் இவர் ஆடுமேய்க்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், வழக்கம்போல ராமசாமி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அவரை கட்டுவிரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து அந்த பாம்பை விடாமல் துரத்திச் சென்ற ராமசாமி அதைப் பிடித்து கொன்று ஒரு சாக்குப் பைக்குள் அதைப் போட்டார். அந்தப் பையுடன் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அவர் சென்றார்.

தன்னை பாம்பு தீண்டியதை மருத்துவர்களிடம் விவரித்த ராமசாமி அத்துடன் சாக்குப் பைக்குள் பிடித்து வைத்திருந்த கட்டுவிரியன் பாம்பை அவர்களிடம் காட்டியுள்ளார். அதைப் பார்த்த மருத்துவர்களும், அங்கிருந்த நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து ராமசாமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவரை அனுப்பி வைத்தனர். விவசாயி ராமசாமி செய்த செயல் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகி உள்ளது.