×

நான்கு வழிச்சாலையாக்கப்பட்டது நந்தனம் சிக்னல் சாலை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

7 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை நந்தனம் சிக்னல் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை: சென்னை நந்தனம் சிக்னல் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிகள் சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., நந்தனம், எல்.ஐ.சி. எனப் பல இடங்களில் நடந்தன. இதனால் நான்குவழிச் சாலையாக இருந்த இது ஒருவழிச்சாலையாக மாற்றப்பட்டது. இதனால் தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை, கிண்டி
 

7 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை நந்தனம் சிக்னல் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சென்னை: சென்னை நந்தனம் சிக்னல் 7 ஆண்டுகளுக்குப் பிறகு  சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த 2012ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிகள் சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., நந்தனம், எல்.ஐ.சி. எனப் பல இடங்களில்  நடந்தன. இதனால் நான்குவழிச் சாலையாக இருந்த இது ஒருவழிச்சாலையாக  மாற்றப்பட்டது. இதனால் தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை, கிண்டி வழியாகச் செல்லவும், அங்கிருந்து தேனாம்பேட்டை வருவதற்கும், நந்தனம் சிக்னலில் இடதுபுறம் திரும்பி மந்தைவெளி செல்லவும் மட்டுமே அந்தச் சாலை பயன்படுத்தப்பட்டு வந்தது. தியாகராயநகரில் இருந்தோ, கோட்டூர்புரம் வழியாகவோ, நந்தனம் சிக்னலை நேரடியாகக் கடக்க முடியாத நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தன. 

இந்நிலையில் தற்போது அண்ணா சாலையில் மெட்ரோ பணிகள் முடிந்து விட்டதால்,  நந்தனம் பகுதியில் பயன்பாட்டிலிருந்த ஒருவழிச் சாலை இன்று முதல் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இனிமேல் கோட்டூர்புரத்தில் இருந்து நேரடியாக தியாகராய சாலைக்கு செல்லவும், அங்கிருந்து நேரடியாக வரவும் முடியும். அதே போல் வெங்கட் நாராயணன் சாலை வழியில்  நந்தனம் சிக்னலை எளிதில் கடக்கலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் நேரமும் மிச்சமாகும் என்று பொதுமக்கள் கருத்து  கூறி வருகின்றனர்.