×

நள்ளிரவில் அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்.. பதறும் பெண் துப்புரவுப் பணியாளர்கள்!

பகல் நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதால் அங்குள்ள குப்பைகளை அகற்றுவது எளிதில் நடக்காது. சென்னையில் நாளொன்றுக்கு ஆயிரம் டன்னுக்கு மேலாகக் குப்பைகள் உருவாகின்றன. குறிப்பாக மார்க்கெட் பகுதிகளில் அதிக குப்பை சேர்க்கப்படுகிறது. பகல் நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதால் அங்குள்ள குப்பைகளை அகற்றுவது எளிதில் நடக்காது. அதனால் பல துப்புரவுப் பணியாளர்கள் இரவு நேரங்களில் பணி புரிகின்றனர். இதில் பெண்களும் இரவு நேர வேலை செய்து வருகின்றனர். சாலையோரம் மட்டும் நெடுஞ்சாலைகளில் இவர்கள் சுத்தம் செய்வர். இரவு
 

பகல் நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதால் அங்குள்ள குப்பைகளை அகற்றுவது எளிதில் நடக்காது.

சென்னையில் நாளொன்றுக்கு ஆயிரம் டன்னுக்கு மேலாகக் குப்பைகள் உருவாகின்றன. குறிப்பாக மார்க்கெட் பகுதிகளில் அதிக குப்பை சேர்க்கப்படுகிறது. பகல் நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதால் அங்குள்ள குப்பைகளை அகற்றுவது எளிதில் நடக்காது. அதனால் பல துப்புரவுப் பணியாளர்கள் இரவு நேரங்களில் பணி புரிகின்றனர். இதில் பெண்களும் இரவு நேர வேலை செய்து வருகின்றனர். சாலையோரம் மட்டும் நெடுஞ்சாலைகளில் இவர்கள் சுத்தம் செய்வர். இரவு நேரத்தில் வேலை செய்வதே ஒரு கடினமான செயல் என்றிருக்கையில், இவர்கள் கைகளில் அணிந்து கொள்ள எந்த வித கையுறையோ அல்லது பாதுகாப்பு உபகரணங்களோ இல்லாமல் வேலை செய்து வருகின்றனர். 

இவ்வளவு கடினங்களுக்கு மத்தியில் வேலை செய்யும் பெண் துப்புரவுப் பணியாளர்களுக்கு சமூக விரோதிகள், மது போதையில் இருப்பவர்கள் தொல்லை கொடுத்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இவர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்களின் காரணமாகப்  பெண் துப்புரவுப் பணியாளர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.