×

நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நளினி மேலும் ஒருமாதம் பரோலை நீட்டிக்கக் கோரி தமிழக அரசிடமும், சிறைத் துறையிடமும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மனு அளித்தார்.ஆனால் அவரது மனு ஆகஸ்ட் 13ல் நிராகரிக்கப்பட்டது. சென்னை : நளினியின் ஒருமாத பரோல் முடிவடையவுள்ள நிலையில் பரோலை 3 வாரங்கள் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி கடந்த 25ஆம் தேதி வேலூர் மத்திய சிறையிலிருந்து, பரோலில் வெளியே வந்தார். வேலூரில் அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ள
 

நளினி மேலும் ஒருமாதம் பரோலை நீட்டிக்கக் கோரி தமிழக அரசிடமும், சிறைத் துறையிடமும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மனு அளித்தார்.ஆனால்  அவரது மனு ஆகஸ்ட் 13ல் நிராகரிக்கப்பட்டது. 

சென்னை : நளினியின் ஒருமாத பரோல் முடிவடையவுள்ள நிலையில் பரோலை 3 வாரங்கள் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி கடந்த 25ஆம் தேதி  வேலூர் மத்திய சிறையிலிருந்து,  பரோலில் வெளியே வந்தார். வேலூரில் அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ள அவர் மகள் திருமண ஏற்பாடுகள்  குறித்து ஆலோசித்து வருகிறார்.  அதே சமயம்  சிறைத்துறை விதிமுறைகளின்படி சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.

நளினியின் மகள் ஹரித்ராவுக்கு செப்டம்பர் மாதம் வரை தேர்வு நடைபெற உள்ளது. இதனால் தேர்வு முடிந்த பிறகு தான் அவர் தமிழகத்திற்கு வருகிறாராம். இதனால் நளினி மேலும் ஒருமாதம் பரோலை நீட்டிக்கக் கோரி தமிழக அரசிடமும், சிறைத் துறையிடமும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மனு அளித்தார்.ஆனால்  அவரது மனு ஆகஸ்ட் 13ல் நிராகரிக்கப்பட்டது. 

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் இந்த உத்தரவை ரத்து செய்து, பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் இந்த மனுவானது  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.  மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், அவரது பரோலை 3 வாரங்கள் நீட்டித்து உத்தரவிட்டனர்.