×

நம்ம ஊரு போலீஸை ஏன் ஸ்கார்ட்லாண்ட் யார்டுகூட கம்பேர் பண்றாங்க தெரியுமா?

மதுரை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த விஜயகாந்த் (சேச்சே அவரில்லீங்க), தனியார் கல்லூரியில் நடந்த காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு வந்திருக்கிறார்(ன்). எத்தனையோ பேர் தேர்வில் இருந்தாலும், தேர்வு அறையில் இருந்த காவலர்கள் அனைவரின் கவனமும் விஜயகாந்த் மீதுதான் இருந்தது. தமிழ்நாட்டு போலீஸை ஸ்கார்ட்லாண்ட் யார்டு அளவுக்கு உயர்த்திப் பேசுவது பழைய விஜயகாந்த் படங்களில் அவ்வப்போது காணக்கிடைக்கும் வசனம். அதற்கு நம்முடைய போலீசாரின் திறமை காரணம் என ஒருபக்கம் சொன்னாலும், அவ்வுண்மைக்கு இன்னொரு பக்கமும் உண்டு. குற்றம் செய்தவர்கள் தங்கள்
 

மதுரை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த விஜயகாந்த் (சேச்சே அவரில்லீங்க), தனியார் கல்லூரியில் நடந்த காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு வந்திருக்கிறார்(ன்). எத்தனையோ பேர் தேர்வில் இருந்தாலும், தேர்வு அறையில் இருந்த காவலர்கள் அனைவரின் கவனமும் விஜயகாந்த் மீதுதான் இருந்தது.

தமிழ்நாட்டு போலீஸை ஸ்கார்ட்லாண்ட் யார்டு அளவுக்கு உயர்த்திப் பேசுவது பழைய விஜயகாந்த் படங்களில் அவ்வப்போது காணக்கிடைக்கும் வசனம். அதற்கு நம்முடைய போலீசாரின் திறமை காரணம் என ஒருபக்கம் சொன்னாலும், அவ்வுண்மைக்கு இன்னொரு பக்கமும் உண்டு. குற்றம் செய்தவர்கள் தங்கள் முட்டாள்தனத்தால் மிகச் சுலபமாக கண்டுபிடிக்கும் அளவுக்கு தடயங்களை விட்டுசெல்வதுதான். மதுரை கிருஷ்ணாபுரத்தைச்  சேர்ந்த விஜயகாந்த் (சேச்சே அவரில்லீங்க), தனியார் கல்லூரியில் நடந்த காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு வந்திருக்கிறார்(ன்). எத்தனையோ பேர் தேர்வில் இருந்தாலும், தேர்வு அறையில் இருந்த காவலர்கள் அனைவரின் கவனமும் விஜயகாந்த் மீதுதான் இருந்தது.

வி.ஐ.பி. வீட்டு கன்னுக்குட்டி என்பதலோ, இல்லை தேர்வில் பிட் அடிக்கும்போது கையும் களவுமாக பிடித்துவிடவேண்டும் என்பதாலோ அல்ல. காவலர் தேர்வெழுத வந்த விஜயகாந்த்தை பல்வேறு குற்ற வழக்குகளுக்காக காவலர்கள் தேடிவந்திருக்கின்றனர். செயின்பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் சிக்காமல் டிமிக்கி கொடுத்துவந்த விஜயகாந்த், என்ன தைரியத்தில் காவலர் தேர்வு எழுத வந்திருப்பார்? இப்ப சொல்லுங்க, நம்ம போலீஸை ஸ்காட்லார்ந்து யார்டுக்கு நிகரா ஒப்பிடுவது போலீசாரின் திறமையாலா அல்லது மங்குனி குற்றவாளிகளாலா?