×

‘நம் மௌனத்தின் வன்மம்’ – ராஜலட்சுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம்

சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் நாளை போராட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை: சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் நாளை போராட்டம் நடைபெற இருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாய்பட்டியை அடுத்த சுந்தரபுரத்தை சேர்ந்தவர் சாமிமுத்து (வயது 48). விவசாயியாக இருக்கிறார். இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது45). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருந்தனர். சாமிமுத்துவின் கடைசி மகள் ராஜலட்சுமி (வயது
 

சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் நாளை போராட்டம் நடைபெற இருக்கிறது.

சென்னை: சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் நாளை போராட்டம் நடைபெற இருக்கிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாய்பட்டியை அடுத்த சுந்தரபுரத்தை சேர்ந்தவர் சாமிமுத்து (வயது 48). விவசாயியாக இருக்கிறார். இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது45). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருந்தனர்.

சாமிமுத்துவின் கடைசி மகள் ராஜலட்சுமி (வயது 13) தலைவாய்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த தினேஷ்குமார் என்கிற கார்த்தி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

தினேஷ்குமாரின் ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமி ராஜலட்சுமியின் தலையை துண்டித்து தினேஷ்குமார் வீதியில் வீசியுள்ளார். காரணம், ராஜலட்சுமி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற ஆணவம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

பள்ளி, வீடு, நட்புகள், அரட்டைகள் என மகிழ்ச்சியாக தன் வாழ்க்கையை நடத்தி வந்த ராஜலட்சுமி இன்று நம்மிடையே இல்லை. ஒரு கயவனின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், சில ஆண்டுகளுக்கு முன் சுவாதி என்ற பெண் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். அவரின் மரணத்திற்கு தமிழகமே கண்ணீர் வடித்தது. ஆனால், ராஜலட்சுமிக்கு நேர்ந்த கொடுமைகள் அவரின் சொந்த மாவட்ட மக்களிடமே இன்னும் முழுமையாக சென்றடைந்ததாக தெரியவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதை தமிழகம் மிக தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டது.

இது போன்ற ஏற்றத் தாழ்வுமிக்க சமூகத்தில் ஒவ்வொன்றிற்கும் போராடி தான் நீதி பெற வேண்டியுள்ளது. அதை உணர்ந்த மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதி அருகில் நாளை ‘நம் மௌனத்தின் வன்மம்’ என்ற பெயரில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நெஞ்சை உறையவைக்கும் அந்த படுகொலைக்கும் போராடித்தான் நீதி பெற வேண்டிய சூழல் இருப்பதை நாம் உணர்ந்து, தலித் பெண்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என போராட்டக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.