×

நடுக்கடலில் தவறி விழுந்த மீனவ இளைஞர் பரிதாப பலி!

அதிர்ச்சியடைந்த மற்ற மீனவர்கள் கடலுக்குள் குதித்து அரை மணிநேரத்திற்கு பிறகு மயக்க நிலையில் இருந்த இளைஞரை மீட்டனர் ஊரடங்கு காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த நிலையில் நேற்று மீண்டும் மீன் பிடிக்க செல்லலாம் என்று அரசு அறிவித்தது. மேலும் நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருந்திய நாட்டுப்படகுகள் மூலம் தொடர்ந்து மீன்பிடிக்கலாம் எனவும் விசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த தர்ஹாவலசையில் இருந்து தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான
 

அதிர்ச்சியடைந்த மற்ற மீனவர்கள் கடலுக்குள் குதித்து அரை மணிநேரத்திற்கு பிறகு மயக்க நிலையில் இருந்த இளைஞரை மீட்டனர்

ஊரடங்கு காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த நிலையில் நேற்று மீண்டும் மீன் பிடிக்க செல்லலாம் என்று அரசு அறிவித்தது. மேலும் நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருந்திய நாட்டுப்படகுகள் மூலம் தொடர்ந்து மீன்பிடிக்கலாம் எனவும் விசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த தர்ஹாவலசையில் இருந்து தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகின் மூலம் 7 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக   சீனி மைதீன் பீர்ஒலி என்ற 23 வயதான மீனவ இளைஞர் கடலுக்குள் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற மீனவர்கள் கடலுக்குள் குதித்து அரை மணிநேரத்திற்கு பிறகு மயக்க நிலையில் இருந்த இளைஞரை மீட்டனர். 

பின்னர் அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மண்டபம் போலீஸார் தொடர்  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.