×

நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் பிரசாந்த் கிஷோர் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி….மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

செல்பி எடுத்து அதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ஆந்திர முதல்வர் மற்றும் பிரசாந்த் கிஷோர் இருவரும் நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைப்பது போல ம் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரலாகி வருகிறது. பிகில் பட வரிஏய்ப்புக்காக நடிகர் விஜய் வீட்டில் கடந்த இருதினங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு சென்ற வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை
 

செல்பி எடுத்து அதை தனது  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

ஆந்திர முதல்வர் மற்றும் பிரசாந்த் கிஷோர் இருவரும் நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைப்பது போல ம் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரலாகி வருகிறது. 

பிகில்  பட வரிஏய்ப்புக்காக நடிகர் விஜய் வீட்டில்  கடந்த  இருதினங்களுக்கு முன்பு  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.  மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில்  அங்கு சென்ற வருமான வரித்துறையினர்  விஜய்யிடம்  விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் விஜய்   ரசிகர்கள் டிவிட்டரில் #WeStandwithThalapathyVijay என ஹேஷ்டேக்கை  டிரெண்டாக்கி  அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இதையடுத்து வருமான வரித்துறையின் சோதனை முடிந்து சில தினங்களுக்கு முன்பு   மீண்டும்  விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.  அப்போது அவரை காண பெருமளவு ரசிகர்கள் கூட்டம் வந்ததால்  விஜய் அங்கிருந்த வேனின் மீது ஏறி செல்பி எடுத்து அதை தனது  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

 

 

இந்நிலையில் விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது அவரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும், அரசியல் காரணங்களுக்காகவும் தான் என்று அவரது ரசிகர்கள் சில அரசியல் பிரமுகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

 அந்த வகையில்  மதுரை மத்திய தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ஆந்திராவை நாங்கள் காப்பாற்றிவிட்டோம். கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் . மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி  மற்றும் பிரசாந்த் கிஷோர் இருவரும் விஜய்யிடம் சொல்வது போல அந்த  போஸ்டர்கள் உள்ளன.தற்போது இதை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வேகமாகப் பரப்பி வருகிறார்கள்.