×

நடிகர் பவன் கல்யாண் கோரிக்கைக்கு பதிலளித்த தமிழக முதல்வர்!

இந்த அறிவிப்பால் மீன்பிடிக்க வந்தவர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மீன்பிடிக்க வந்தவர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து
 

இந்த அறிவிப்பால் மீன்பிடிக்க வந்தவர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள். 

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பால் மீன்பிடிக்க வந்தவர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள். 

 

இதையடுத்து  நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், “ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோம பேட்டா மண்டலத்தின் கோலகண்டி கிராமத்திலிருந்து மீன்பிடிக்க தமிழக கடற்கரை எல்லைக்கு சென்ற சுமார் 99 மீனவர்கள் வைரஸ் பாதிப்பால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனர். என்றும் அவர்களுக்கு போதிய உணவு மற்றும் உறைவிடம் வழங்கி அவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்குமாறும் கோரிக்கை விடுத்து டிவிட்டரில் முதல்வர் பழனிசாமியை டேக் செய்திருந்தார். 

இந்நிலையில் பவன் கல்யாண் கோரிகையை ஏற்று டிவிட்டரில் பதிலளித்துள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, ‘இது குறித்து உடனடியாக செயல்படுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவித்துள்ளேன். நாங்கள் அவர்களைக் கவனித்துக்கொள்வோம். நன்றி ‘என்று குறிப்பிட்டுள்ளார்.