×

நடனத்தால் வளர்ந்த டிக் டாக் காதல்…ஓட்டம் பிடித்த கணவன்; நடுத்தெருவில் நிற்கும் மனைவி!

திறமையைக் காட்ட, ஏமாந்த அந்த அப்பாவி பெண், கடவுள் சத்தியமா இனிமே உங்கள சந்தேகப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார். சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முரளிதரன். இவருக்கு திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்த நிலையில் சமீபத்தில் விதவை பெண் ஒருவரை குடும்பத்தார் இரண்டாவதாகத் திருமணம் செய்து வைத்தனர். இதனால் கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் முரளிதரனுக்கும் திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் டிக் டாக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 

திறமையைக் காட்ட, ஏமாந்த அந்த அப்பாவி பெண், கடவுள் சத்தியமா  இனிமே உங்கள சந்தேகப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார். 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முரளிதரன். இவருக்கு திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்த நிலையில் சமீபத்தில் விதவை பெண் ஒருவரை குடும்பத்தார்  இரண்டாவதாகத் திருமணம் செய்து வைத்தனர். இதனால் கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 

இந்நிலையில் முரளிதரனுக்கும் திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் டிக் டாக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  டிக் டாக்கில்  தனது நடன வீடியோக்களை பதிவிட்டு வந்த அந்த பெண் முரளிதரனுடன் டூயட் பாடும் அளவுக்கு  இருவரும் பழகியுள்ளனர். நாளடைவில் இருவரும் செல்போனில் பேசியும், தனிமையில் சந்தித்தும் வந்துள்ளனர். அதை வீடியோவாக வெளியிட்டும் காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில்  இவரது டிக்டாக் வீடியோ விவகாரம் பற்றி முரளிதரனின் மனைவிக்கு செல்ல, இதுகுறித்து முரளிதரனிடம் அவர் கேட்டுள்ளார். ஆனால்  இதெல்லாம் ஒரு நடிப்பு திறமைம்மா, மாமாவ நீயே சந்தேகப்படுற பாரு… என்று உண்மையாகவே அவரது நடிப்பு திறமையைக் காட்ட, ஏமாந்த அந்த அப்பாவி பெண், கடவுள் சத்தியமா  இனிமே உங்கள சந்தேகப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார். 

இதையடுத்து  திருச்சி  டிக்டாக் காதலிக்கு, நாமக்கல் அருகே தனி வீடு எடுத்து,தங்கவைத்து குடித்தனம் நடித்து வந்துள்ளார் முரளிதரன். அப்போது அவர்கள் எடுத்த வீடியோவும் அவரது  மனைவி கண்ணில் பட எந்த பதிலும் முரளிதரனிடமிருந்து  வரவில்லை. மாறாக மனைவியை விட்டுவிட்டு நாமக்கல் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டு வாடகை  கொடுக்க முடியாமல் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அந்த பெண் நடுத்தெருவில் இருக்கிறார்.