×

“நகரும் ரேஷன் கடைகள் அமைக்கப்படும்” : அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்

திருச்சி லால்குடியில் உள்ள பள்ளிவயலில் பகுதி நேர ரேஷன் கடைகளைத் தமிழக அரசு அமைத்துக் கொடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். பட்ஜெட் குறித்த இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன், திருச்சி லால்குடியில் உள்ள பள்ளிவயலில் பகுதி நேர ரேஷன் கடைகளைத் தமிழக அரசு அமைத்துக் கொடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் நலன் கருதி 2,424
 

திருச்சி லால்குடியில் உள்ள பள்ளிவயலில் பகுதி நேர ரேஷன் கடைகளைத் தமிழக அரசு அமைத்துக் கொடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். 

பட்ஜெட் குறித்த இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில்  தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன், திருச்சி லால்குடியில் உள்ள பள்ளிவயலில் பகுதி நேர ரேஷன் கடைகளைத் தமிழக அரசு அமைத்துக் கொடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் நலன் கருதி 2,424 ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருச்சி லால்குடியில் உள்ள பள்ளிவயலில் பகுதிநேர ரேஷன் கடைக்கு பதிலாக நடமாடும் ரேஷன் கடைகள் அமைத்துத்தரப்படும். ரேஷன் கார்டு குறைவாக உள்ள இடங்களில் நகரும் ரேஷன் கடைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கூறினார்.