×

நகரத்தார் தொழில்முனைவு மாநாடு! சேலத்தில் பிப்ரவரி 16-ல் நடக்கிறது

திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்கள் நகரத்தார் சமூகத்தினர். காணி காணியாகத் தேடி, கோடி கோடியாய் தருமம் செய்த சமூகம் என்றும் அழைக்கப்படுகிறது. மூவேந்தர்கள் ஆட்சிக்குப் பிறகு பிற மதத்தவர்கள் ஆட்சி பல வந்தாலும், தங்கள் சைவ மத நம்பிக்கையில் உறுதியாக இருந்தவர்கள் நகரத்தார்கள். இன்றைக்கு ராமேஸ்வரம் முதல் காசி வரை உள்ள பல பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், ஆலயங்கள், பசுமடங்கள், சத்திரங்கள், மருத்துவமனைகளைக் கட்டி சிறப்பாக நிர்வகித்து வருபவர்கள் நகரத்தார் சமூகத்தினர். நகரத்தார் சேம்பர் ஆஃப்
 

திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்கள் நகரத்தார் சமூகத்தினர். காணி காணியாகத் தேடி, கோடி கோடியாய் தருமம் செய்த சமூகம் என்றும் அழைக்கப்படுகிறது. மூவேந்தர்கள் ஆட்சிக்குப் பிறகு பிற மதத்தவர்கள் ஆட்சி பல வந்தாலும், தங்கள் சைவ மத நம்பிக்கையில் உறுதியாக இருந்தவர்கள் நகரத்தார்கள். இன்றைக்கு ராமேஸ்வரம் முதல் காசி வரை உள்ள பல பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், ஆலயங்கள், பசுமடங்கள், சத்திரங்கள், மருத்துவமனைகளைக் கட்டி சிறப்பாக நிர்வகித்து வருபவர்கள்  நகரத்தார் சமூகத்தினர். 

நகரத்தார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (NCC)  சார்பில் நகரத்தாருக்கான தொழில் மாநாடு ( NCC confluence) ஒன்று சேலத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ளது.

திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்கள் நகரத்தார் சமூகத்தினர். காணி காணியாகத் தேடி,  கோடி கோடியாய் தருமம் செய்த சமூகம் என்றும் அழைக்கப்படுகிறது. மூவேந்தர்கள் ஆட்சிக்குப் பிறகு பிற மதத்தவர்கள் ஆட்சி பல வந்தாலும், தங்கள் சைவ மத நம்பிக்கையில் உறுதியாக இருந்தவர்கள் நகரத்தார்கள். இன்றைக்கு ராமேஸ்வரம் முதல் காசி வரை உள்ள பல பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், ஆலயங்கள், பசுமடங்கள், சத்திரங்கள், மருத்துவமனைகளைக் கட்டி சிறப்பாக நிர்வகித்து வருபவர்கள்  நகரத்தார் சமூகத்தினர். 

நகரத்தார் சமூகத்தவர்களுக்கான சந்திப்புகளை  அவ்வப்போது NCC-யால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சென்னை ஐ.டி.சி சோழா கிராண்ட் ஹோட்டலில் நகரத்தார் மாநாடு (IBCN 2019 ) நடந்தது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார். 

இதேபோன்ற மாநாட்டை தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் நடத்த அப்போது முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் சேலத்தில் நகரத்தார் தொழில் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் எஸ்தான்சியா ஹோட்டலில் பிப்ரவரி 16-ம் தேதி காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கவிருக்கிறது.

இந்த தொழில்முனைவு மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் தொழில் முனைவுக்கு, அதன் அபிவிருத்திக்கு, வர்த்தக தொடர்புக்கு, வியாபார தெளிவுக்கு, விளம்பர யுத்திக்கு, வரி விவரம் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். இதை நாட்டுக்கோட்டை நகரத்தார் பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இதில் பங்கேற்க பெரியவர்களுக்கு ரூ.400-ம் (ஜி.எஸ்.டி 18 சதவிகிதம்)14 முதல் 23 வயதுக்குப்பட்டவர்களுக்கு ரூ.200-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பவர்களுக்கு பதிவு கட்டணம், காலை உணவு, மதிய உணவுக்காக இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 633806 60796 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்றைய தலைமுறையினர் பிரமிக்கும் நகரத்தார் கட்டமைப்பு, கட்டிடக்கலை, திட்டமிடல், அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக, அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டும் நிகழ்வாக இந்த மாநாடு நடத்தப்படுவதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.