×

தேர்வு மன அழுத்தம் காரணமாக மாணவி தற்கொலை… இந்து அமைப்புக்கள் போராட்டத்தால் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்று கூறி இந்து அமைப்புகள் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்று கூறி இந்து அமைப்புகள் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் தனது இரண்டாவது மகள் பேச்சியம்மாளை பாளையங்கோட்டையில்
 

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்று கூறி இந்து அமைப்புகள் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்று கூறி இந்து அமைப்புகள் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் தனது இரண்டாவது மகள் பேச்சியம்மாளை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்திருந்தார்.

அரையாண்டுத் தேர்வில் பேச்சியம்மாள் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார். மேலும், பள்ளியில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளிலும் பங்கேற்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பேச்சியம்மாளை கண்டித்த ஆசிரியர்கள், பெற்றோரை அழைத்துவரும்படி கூறியுள்ளனர். இதனால், செய்துங்கநல்லூர் வந்த பேச்சியம்மாள் யாரிடமும் எதுவும் கூறாமல் இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயிற்றுவலி காரணமாக தங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டார் என்று பெருமாள் எழுதிக் கொடுத்ததின் அடிப்படையில், பேச்சியம்மாளின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
உடற்கூறு ஆய்வு முடிந்த நிலையில் அவரது உடலை வாங்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறுத்தனர்.

பள்ளியில் கண்டித்ததால்தான் பேச்சியம்மாள் தற்கொலை செய்துகொண்டார். எனவே, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் ஏ.பி.வி.பி உள்ளிட்ட இந்து அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். 
தேர்வு, அதிக மதிப்பெண், சிறப்பு வகுப்பு என்று அதிக அழுத்தம் மாணவர்களுக்கு வருவதால் அவர்கள் தவறான முடிவு எடுக்கின்றனர். இதுபோன்ற மன அழுத்தம் தரக்கூடிய விஷயத்தை தவிர்க்க வேண்டும் என்று கல்வியாளர்கள், மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். மாணவியின் மரணத்துக்கு தி.மு.க எம்.பி கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.