×

தேர்தல் பிரசாரத்திற்கு புது வேன் வாங்கி பட்டையை கிளப்பும் தினகரன்

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பிரசாரத்திற்காக புது வேன் ஒன்றை வாங்கியுள்ளார். டிடிவி தினகரனை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கியதை அடுத்து அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். சுயேட்சை வேட்பாளராக ஆர்.கே.நகரில் அபார வெற்றி பெற்றது, அடுத்ததாக கட்சியை தொடங்கி தீவிரமாக செயல்பட்டு வருவது என டிடிவி தினகரன் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் செல்லும்
 

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பிரசாரத்திற்காக புது வேன் ஒன்றை வாங்கியுள்ளார்.

டிடிவி தினகரனை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கியதை அடுத்து அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். சுயேட்சை வேட்பாளராக ஆர்.கே.நகரில் அபார வெற்றி பெற்றது, அடுத்ததாக கட்சியை தொடங்கி தீவிரமாக செயல்பட்டு வருவது என டிடிவி தினகரன் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார். 

தமிழகம் முழுவதும் செல்லும் தினகரன் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முகம் கோணாமல் கூலாக பதிலளித்து வருகிறார். அதேசமயம் ஆளுங்கட்சிக்கு எதிராகவும், மத்திய பாஜகவிற்கு எதிராகவும் காட்டமான கருத்துக்களையும் முன்வைத்து வருகிறார் தினகரன். அவரது இந்த அணுகுமுறை தென் மாவட்டங்களில் பலருக்கு பிடித்து போக அவரது கட்சியில் தற்போது கணிசமாக சேர்ந்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக பெற்ற வெற்றி போல், தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் வென்று கட்சி ரீதியாக தனது பலத்தை நிரூபிக்க அவர் தயாராகி வருகிறார் என கூறப்படுகிறது. குறிப்பாக அவர் குறி வைத்திருப்பது திருவாரூர்தானாம். ஏனெனில் அரசியல் ஆளுமை கருணாநிதியின் சொந்த தொகுதியை கைப்பற்றிவிட்டால், தமிழகத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் எதிராக பெரும் சக்தியாக உருவெடுக்கலாம் என்பது அவர் கணிப்பு. அதற்கான ஆயத்த பணிகளில் இப்போதே அவரும், அவரது ஆதரவாளர்களும் இறங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில், டிடிவி தினகரன் தனது சுற்றுப்பயணத்திற்காகவும், தேர்தல் சமயங்களின் போது பிரசாரத்திற்கு உபயோகப்படுத்தி கொள்ளவும் புது வேன் ஒன்றை வாங்கியுள்ளார். சகல வசதிகள் கொண்ட அந்த வேனை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் துரை வடிவமைத்துள்ளார் என கூறப்படுகிறது.