×

தேர்தல் நிபுணர் பிரசாந்த் தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரி!

தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் எடப்பாடியுடனும் கமல் கட்சிக்காகவும் ஒப்பந்த அடிப்படையில் வேலையை ஆரம்பித்திருக்கிறார். இதனால், அவரது குழுவுக்குள்ளேயே ஏகப்பட்ட குமைச்சல். இந்தியாவில் ஊழல் பெருகிவிட்டது, அதற்கு காரணமான காங்கிரஸ் அரசை மாற்றுவதற்கு மோடி பிரதமராக வேண்டும், அதற்கு நீங்கள் உதவ வேண்டும்’ என பெரிய நிறுவனங்களில் பெரிய பெரிய பொறுப்புகளில் இருந்த பாஜக அனுதாபிகளிடன் பத்து வருடங்களுக்கு முன்பு I-PAC நிறுவனத்தை ஆரம்பித்தார் பிரசாந்த் கிஷோர். சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரிடம் பாஜகவுக்கு அனுகூலமான மனநிலையை உருவாக்கும் வேலையை
 

தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் எடப்பாடியுடனும் கமல் கட்சிக்காகவும் ஒப்பந்த அடிப்படையில் வேலையை ஆரம்பித்திருக்கிறார். இதனால், அவரது குழுவுக்குள்ளேயே ஏகப்பட்ட குமைச்சல்.

இந்தியாவில் ஊழல் பெருகிவிட்டது, அதற்கு காரணமான காங்கிரஸ் அரசை மாற்றுவதற்கு மோடி பிரதமராக வேண்டும், அதற்கு நீங்கள்  உதவ வேண்டும்’ என பெரிய நிறுவனங்களில் பெரிய பெரிய பொறுப்புகளில் இருந்த பாஜக அனுதாபிகளிடன் பத்து வருடங்களுக்கு முன்பு I-PAC நிறுவனத்தை ஆரம்பித்தார் பிரசாந்த் கிஷோர். சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரிடம் பாஜகவுக்கு அனுகூலமான மனநிலையை உருவாக்கும் வேலையை கிஷோரின் நிறுவனம் அருமையாகச் செய்ய, 2014ல் காங்கிரஸை வீழ்த்தி பிரதமரானார் மோடி. பாஜகவின் வெற்றியில் பிரசாந்தின் பங்கு அணில் அளவுக்கு இல்லாமல் அணகோண்டா அளவுக்கு இருந்தது எனலாம். காரணம், அதன்பிறகு அவர் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்ட தேர்தல் நிபுணரானார். சமீபத்திய ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றியிலும் இந்த அணகோண்டாவின் பங்குண்டு. அடுத்ததாக, மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிராக மம்தாவுக்கு ஆதரவாக i-PAC களமாடி வருகிறது அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக.

தமிழ்நாட்டிற்கு வருவோம். எல்லா ஊரிலும் ஒவ்வொரு கட்சிக்கு ஒப்பத்தந்தின் அடிப்படையில் களவேலை பார்க்கும் கிஷோர், தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் எடப்பாடியுடனும் கமல் கட்சிக்காகவும் ஒப்பந்த அடிப்படையில் வேலையை ஆரம்பித்திருக்கிறார். இதனால், அவரது குழுவுக்குள்ளேயே ஏகப்பட்ட குமைச்சல். ஒரே ஊரில் எதிரெதிராக இருக்கும் இரண்டு பேருக்கு ஆதரவாக எப்படி பணி செய்ய முடியும் என்ற கேள்வி எழவே, அந்த நிறுவனத்திலும் குறைந்தபட்ச மனசாட்சி கொண்டவகள் 20 பேர் சமீபத்தில் விலகிவிட்டனர். நமக்கு என்ன சந்தேகம்னா, அதிமுகவே பாஜகவின் பி டீம் என்பதும், மக்கள் நீதி மய்யம் பாஜகவின் சி டீம் என்பதும் நமக்கே தெரியும்போது, பிரசாந்த் கிஷோர் டீமில் இருப்பவர்களுக்கு தெரியாமலா போயிருக்கும்? அந்தளவுக்கு அரசியல் அப்பாவிகளையா வேலைக்கு வைத்திருக்கிறார் கிஷோர்? எல்லாம் அமித் ஷாவுக்கே வெளிச்சம்!