×

தேர்தல் செலவுக்கு எத்தனை கோடி; விஜயகாந்த் – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு பின்னணி?!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ஐ அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் செலவு பற்றியும், தொகுதிகள் வழங்குவது பற்றியும் இதில் ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ஐ அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் செலவு பற்றியும், தொகுதிகள் வழங்குவது பற்றியும் இதில் ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்க சென்று திரும்பிய விஜயகாந்த்-ஐ அரசியல்
 

தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ஐ அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் செலவு பற்றியும், தொகுதிகள் வழங்குவது பற்றியும் இதில் ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ஐ அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் செலவு பற்றியும், தொகுதிகள் வழங்குவது பற்றியும் இதில் ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த் – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்க சென்று திரும்பிய விஜயகாந்த்-ஐ அரசியல் தலைவர்கள் பலரும் சந்தித்து வந்தனர். மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்த பின்பு, பாமக நிறுவனர் ராமதாஸ் விஜயகாந்த்-ஐ சந்தித்தார். இந்த சந்திப்பு இரு கட்சிகள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து தேர்தலில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அதிமுக தரப்பு ஏற்பாடு செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ஐ சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்தார்.

தொகுதிகள் வழங்குவது பற்றி ஆலோசனை

இந்த சந்திப்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணைப் பொதுச்செயலாளர் சுதிஷ், அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் தேர்தல் பங்கீடு குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர். தேமுதிகவுக்கு 4 சீட்டுகள் மட்டுமே கொடுத்திருந்தாலும், தொகுதிகள் ஒதுக்குவதில் கேட்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் என தேமுதிக அதிமுக தரப்பிடம் கேட்டுக்கொண்டது! இதுகுறித்து முடிவு செய்யவும், தேர்தல் செலவு பற்றி ஆலோசனை நடத்தவுமே இந்த சந்திப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காகதான் விஜயகாந்த்-ஐ பாமக நிறுவனர் ராமதாஸ் முன்பே சந்தித்தது! தேமுதிக தரப்பு கேட்கும் தொகுதிகள் வழங்குவது பற்றிய ஆலோசனை முடிந்ததும், தேர்தல் செலவு பற்றி விவாதிக்கப்பட உள்ளதாம்!

தேர்தல் செலவு

தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பது, அதற்காக செய்யப்படும் செலவு. போஸ்டர், பேனர், டிவி விளம்பரம், போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தொண்டர்களுக்கான செலவு என கிட்டத்தட்ட குறைந்த பட்சம் ஒரு தொகுதிகக்கு 12 கோடி ரூபாய்க்கு மேலாவது ஆகும் என பொது வெளியில் விவாதிக்கப்படுகிறது! தேமுதிக தரப்பு 30 கோடி ரூபாய் வரை வழங்க வாய்ப்புள்ளதாம்! அதற்கு மேல் கூட்டணி அமைத்தமைக்காக தேமுதிகவின் தேர்தல் செலவில் அதிமுகவும் பங்கெடுக்கும் என்று கூறப்படுகிறது.