×

கழிவுநீரை பாதுகாப்பின்றி அகற்றும் தொழிலாளர்கள் : தேனி அரசு மருத்துவமனையில் நடைபெறும் அவலம்!

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுநீரை தொழிலாளர்களின் அகற்றிவருகின்றனர். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 900 பேர் உள்நோயாளிகளாவும் , 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அத்துடன் மருத்துவர்கள் குடியிருப்பு மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதி என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வளாகத்தில் வசித்து வருகின்றனர் . இந்நிலையில் இப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு
 

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுநீரை தொழிலாளர்களின் அகற்றிவருகின்றனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 900 பேர் உள்நோயாளிகளாவும் , 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அத்துடன் மருத்துவர்கள் குடியிருப்பு மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதி என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வளாகத்தில் வசித்து வருகின்றனர் .

இந்நிலையில் இப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ளே இருக்கும் சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது . இந்த கழுவுநீரை சுத்திகரிக்க ஒப்பந்த அடிப்படையில் சுமார் 300 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இவர்கள் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் ஈடுபட்டு பணிபுரிந்து வருவதாக புகார் எழுந்துள்ளன. இதனால் அவர்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.