×

நோயாளியை தரையில் படுக்கவைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய அவலம்: தேனி அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை காரணாமாக நோயாளிகளின் தரையில் படுத்து கொண்டு சிகிச்சை பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2005ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா மாநிலத்தில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நாளொன்றுக்கு புறநோயாளிகள் 3 ஆயிரம், உள்நோயாளிகள் 2 ஆயிரம் என சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை காரணாமாக நோயாளிகளின் தரையில் படுத்து கொண்டு சிகிச்சை பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2005ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா மாநிலத்தில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நாளொன்றுக்கு புறநோயாளிகள் 3 ஆயிரம், உள்நோயாளிகள் 2 ஆயிரம் என சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் உள்நோயாளிகள் வார்டுகள் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும் நிலையில், போதுமான படுக்கைகள் இல்லாத காரணத்தால் தரையில் படுக்கை வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தரையில் வைத்தபடியே ட்ரிப்ஸ் ஏற்றபட்டு வருகிறது. அத்துடன் ஒரு படுக்கையில் 2 நோயாளிகளும் படுக்கவைக்கப்படுகின்றனர்.

இந்த சூழலில் உள் நோயாளிகள் பிரிவில் 602 வது வார்டில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நோயாளி ஒருவரை வார்டுக்கு வெளியே தரையில் படுக்க வைத்து டிரிப்ஸ் ஏற்றிய நிலை அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம் இல்லாத காரணத்தினால் அரசு மருத்துவமனையை பொது மக்கள் நாடி வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான படுக்கை வசதியை அரசு செய்து தரவேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.