×

தேசபக்தி கொண்ட ஒருவரால்  சுட்டுக் கொல்லப்பட்ட காந்தி…கமல் ஹாசன் வேதனை!

அவரது உருவப்படத்திற்கும், சிலைக்கும் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். தேசப்பிதா காந்தியடிகள், நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட தினம் (ஜனவரி-30) இன்று. அதன்படி காந்தியடிகளின் 73 ஆவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் அவரது உருவப்படத்திற்கும், சிலைக்கும் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சீர்திருத்தப்பட்ட உலகில் மிகக் குறைந்த மற்றும்
 

அவரது உருவப்படத்திற்கும், சிலைக்கும் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

தேசப்பிதா காந்தியடிகள், நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட தினம் (ஜனவரி-30) இன்று. அதன்படி காந்தியடிகளின் 73 ஆவது  நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் அவரது உருவப்படத்திற்கும், சிலைக்கும் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின்  தலைவருமான கமல் ஹாசன் தனது  டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சீர்திருத்தப்பட்ட உலகில் மிகக் குறைந்த மற்றும் சராசரி விமர்சன வடிவம் படுகொலை ஆகும்.

உலக அமைதிக்கான மிக முக்கியமான தூதர் மற்றும் எனது தனிப்பட்ட வாழ்க்கையின் வழிகாட்டியாக இருந்த ஒருவர்,  தேசபக்தி கொண்ட ஒருவரால்  சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வரலாறு மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக  காந்திஜியை நினைவில் கொள்வோம்’ என்று பதிவிட்டுள்ளார்.