×

துரோகியை வீழ்த்த எதிரியுடன் எதிரி… ஸ்டாலினுக்கு எதிராக டி.டி.வியுடன் மு.க.அழகிரி அதிரடி வியூகம்..?

துரோகியை வீழ்த்த எதிரியுடன் எதிரி இணையலாம் என்கிற ரூட்டை பிடித்து அதிமுகவை வீழ்த்த டி.டி.வி.தினகரனும், தனது சகோதரர் ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட மு.க.அழகிரியும் உதவிக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. துரோகியை வீழ்த்த எதிரியுடன் எதிரி இணையலாம் என்கிற ரூட்டை பிடித்து அதிமுகவை வீழ்த்த டி.டி.வி.தினகரனும், தனது சகோதரர் ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட மு.க.அழகிரியும் உதவிக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுகவில் இருந்து மு.க.ஸ்டாலினால் கழற்றிவிடப்பட்டார் தென்மண்டல அமைப்புச் செயலாளரான மு.க.அழகிரி. அதேபோல்
 

துரோகியை வீழ்த்த எதிரியுடன் எதிரி இணையலாம் என்கிற ரூட்டை பிடித்து அதிமுகவை வீழ்த்த டி.டி.வி.தினகரனும், தனது சகோதரர் ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட மு.க.அழகிரியும் உதவிக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

துரோகியை வீழ்த்த எதிரியுடன் எதிரி இணையலாம் என்கிற ரூட்டை பிடித்து அதிமுகவை வீழ்த்த டி.டி.வி.தினகரனும், தனது சகோதரர் ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட மு.க.அழகிரியும் உதவிக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

 திமுகவில் இருந்து மு.க.ஸ்டாலினால் கழற்றிவிடப்பட்டார் தென்மண்டல அமைப்புச் செயலாளரான மு.க.அழகிரி. அதேபோல் சசிகலா முதல்வராக பதவியேற்கப் போகும் தருணத்தில் அவரது குடும்பத்தினரை ஒதுக்கி விட்டு முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.  இதனால் டி.டிவி.தினகரன் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றே கூறி வருகிறார். 

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளரை ஆதரிக்க கோரி மு.க. அழகிரியிடம் தொலைபேசி வழியாக டி.டி.வி.தினகரன் வேண்டுகோள் விடுத்ததாக கூறுகிறார்கள். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய  4 தொகுதி இடைத்தேர்தல்களில் வெல்ல ஓவ்வொரு கட்சியும் வியூகங்கள் அமைத்து வருகின்றன. 

அதிமுகவும், திமுகவும் இந்த நான்கு தொகுதிகளையும் வென்றே ஆக வேண்டும் என வைராக்கியம் பூண்டுள்ளன. டி.டி.வி.தினகரன் தரப்பு 4ல் 2 என முரண்டு பிடித்து வருகிறது. முக்கியமாக திருப்பரங்குன்றம் தொகுதியை அழகிரி ஆதரவுடன் கைப்பற்றிவிடலாம்  எனத் திட்டமிட்டுள்ளார் டி.டி.வி.

இது தொடர்பாக முன்பேமு.க. அழகிரியிடம் போனில் பேசி வைத்துள்ளார் டி.டி.வி.தினகரன். தற்போது மீண்டும் அழகிரியை தொலைபேசியில் அழைத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு கேட்டுள்ளார்.  தினகரன்  கூறியதை அமைதியாக கேட்டுக் கொண்ட மு.க. அழகிரி, “ஆகட்டும் பார்க்கலாம்” எனக் கூறி இருக்கிறாராம். இது மட்டுய்ம் நடந்து விட்டால் எடப்பாடி தரப்புக்கும், மு.க.ஸ்டாலின் தரப்புக்கும் பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பது மற்யுக்க முடியாத உண்மை.