×

துரைமுருகன் மகன் தொகுதியில் விரட்டி விரட்டி சோதனை… தேர்தலை நிறுத்தியும் அடங்காத கடமை..!

தேர்தலை நிறுத்தியபிறகும் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் களமிறங்கிய வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து சோதனை சாவடிகளிலும் மீண்டும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். தேர்தலை நிறுத்தியபிறகும் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் களமிறங்கிய வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து சோதனை சாவடிகளிலும் மீண்டும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும்,
 

தேர்தலை நிறுத்தியபிறகும் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் களமிறங்கிய வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து சோதனை சாவடிகளிலும் மீண்டும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

தேர்தலை நிறுத்தியபிறகும் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் களமிறங்கிய வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து சோதனை சாவடிகளிலும் மீண்டும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும் வேட்பாளர்களாக களமிறங்கியதால் கடும் போட்டி நிலவியது.  இந்நிலையில் அங்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த கட்டுகட்டான 11.63 கோடி பணம் சிக்கியது. இதனால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தலை நடத்த வேண்டும் எனக்கோரி அதிமுக கூட்டணி வேட்பாளரும் திமுக வேட்பாளரும் தனித்தனியாக மனு அளித்துள்ளனர். இந்நிலையில் திடீரென வேலூரில் சத்துவாச்சாரி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு முதல் தேர்தல் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு அடிப்படையில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

13 சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருவதால் தேர்தலுக்கு முன்பு போல ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.