×

தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக மாதவன் நியமனம்!

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக தீபாவின் கணவர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை: எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக தீபாவின் கணவர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரின் அண்ணன் மகள் தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கினார். இதனையடுத்து தீபாவுக்கும் அவரின் கணவர் மாதவனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு மாதவனும் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். அதற்கு எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ திராவிட முன்னேற்றக்
 

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக தீபாவின் கணவர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். 

சென்னை: எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக தீபாவின் கணவர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரின் அண்ணன் மகள் தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கினார். இதனையடுத்து தீபாவுக்கும் அவரின் கணவர் மாதவனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு மாதவனும் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். அதற்கு எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்தார். தற்போது தீபா, மாதவன் தொடர்பான செய்திகள் வருவது குறைந்துவிட்டன. 

இதனிடையே  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்திவருகிறது. இந்தக் கமிஷனிடம் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக மாதவன் கூறியிருந்தார். இதனால் விசாரணைக்காக மாதவன் கமிஷனில் ஆஜரானார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நானும் தீபாவும் ஒன்று சேர்ந்து விட்டோம். இனி எங்களின் அரசியல் பயணமும் ஒன்றாகும். கட்சியும் பேரவையும் இணைவது தொடர்பாக ஆலோசித்துவருகிறோம்’ என்றார்.

‘இந்நிலையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக மாதவன் இன்று (11.01.2019) நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.