×

திருமணத் தகராறு… மணமகளின் தம்பியைக் குத்தி கொலை செய்த மாப்பிள்ளை!

சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள மாங்காடு பகுதியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக தங்கியிருந்து வேலைப் பார்த்து வந்தார்கள். அவர்களுன் அஜய்குமார் என்பவரும் தங்கியிருந்து அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுடன் அதே மாநிலத்தை சேர்ந்த சுனில் கொண்டா என்பவரும் தங்கியிருந்து தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்தார். சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள மாங்காடு பகுதியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக தங்கியிருந்து வேலைப் பார்த்து வந்தார்கள். அவர்களுன் அஜய்குமார் என்பவரும் தங்கியிருந்து அருகில் உள்ள
 

சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள மாங்காடு பகுதியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக தங்கியிருந்து வேலைப் பார்த்து வந்தார்கள். அவர்களுன் அஜய்குமார் என்பவரும் தங்கியிருந்து அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுடன் அதே மாநிலத்தை சேர்ந்த சுனில் கொண்டா என்பவரும் தங்கியிருந்து தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்தார்.

சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள மாங்காடு பகுதியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக தங்கியிருந்து வேலைப் பார்த்து வந்தார்கள். அவர்களுன் அஜய்குமார் என்பவரும் தங்கியிருந்து அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுடன் அதே மாநிலத்தை சேர்ந்த சுனில் கொண்டா என்பவரும் தங்கியிருந்து தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்தார்.  சமீபத்தில் அஜய்குமாரின் அக்காவிற்கு மாப்பிள்ளையாக சுனிலை அவர்களது பெற்றோர் தேர்வு செய்து வைத்திருந்தனர். தனது அறையில் உடன் தங்கியிருக்கும் சுனில் தான் அக்காவை கல்யாணம் செய்துக் கொள்ளப் போகிறவர் என்று தெரிந்ததும், இதற்கு சம்மதிக்காமல், பெற்றோர்களிடம் அஜய்குமார் சண்டை போட்டிருக்கிறார்.

இந்நிலையில் ஒரே அறையில் தங்கியிருந்த நண்பர்களான அஜய்குமாருக்கும், சுனிலுக்கும் நேற்று முன்தினம் இரவு கல்யாணப் பேச்சு பற்றி  தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தகராறு ஏற்பட்ட போது சுனில் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த சுனில்கொண்டா அருகில் இருந்த கத்திரிகோலை திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணின் தம்பியான அஜய்குமாரின் கழுத்தில் குத்தினார். கழுத்தில் கத்திக் குத்து பலமாக விழுந்ததால், அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் கீழே சரிந்து விழுந்தார். உடன் தங்கி இருந்த நண்பர்கள் அஜய்குமாரை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அஜய்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில்கொண்டாவை கைது செய்தனர்.
கொலையுண்ட அஜய்குமாரின் அக்காவை சுனில்கொண்டாவுக்கு பேசி முடிவு செய்து இருந்த நிலையில், அஜய்குமார் தொடர்ந்து கல்யாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும் அக்காவை சுனில் கொண்டாவுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம்… அவருடைய நடத்தை சரியில்லை என்றும் பெற்றோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார். இதனை அறிந்த சுனில் கொண்டா தொடர்ந்து அஜய்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வாய்தகராறு கொலையில் முடிந்துள்ளது.