×

திருப்பூரில் சிஏஏ-வுக்கு எதிராக போராடியவர்களை அப்புறப்படுத்தும் உத்தரவை நிறுத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையைத் தொடர்ந்து தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தொடர் போராட்டம் நடந்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருப்பூரில் போராடியவர்களை அப்புறப்படுத்த பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையைத் தொடர்ந்து தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான
 

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையைத் தொடர்ந்து தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருப்பூரில் போராடியவர்களை அப்புறப்படுத்த பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையைத் தொடர்ந்து தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

திருப்பூரில் அனுமதியின்றி போராட்டம் நடந்து வருவதாகவும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை ஏன் அப்புறப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியது. மேலும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தமிழகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு ஆஜராகி முறையீடு செய்தனர். போராட்டம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த கோபிநாத் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இரு தரப்பு வாதங்களையும் கேட்காமல் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து மார்ச் 11ம் தேதி அனைத்து தரப்பும் தங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என்றும் அதுவரை (மார்ச் 11ம் தேதி வரை) போராட்டக்காரர்களை கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவிட்டார்.