×

திருநெல்வேலியிலிருந்து ராமாயண யாத்திரை ரயில்… மார்ச் 5ம் தேதி புறப்படுகிறது!

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், இந்தியாவில் ஆன்மிக சுற்றலா தரிசனத்துக்கு சிறப்பு ரயில் சேவையை ஐ.ஆர்.சி.டி.சி இயக்கி வருகிறது.தென் மண்டலத்தில் இருந்து இதுவரை 370 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன இதில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். திருநெல்வேலியில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சென்னை வழியாக ராமாயண யாத்திரை ரயில் இயக்கப்பட உள்ளது என்று ஐ.ஆர்.சி.டி.சி தென் மண்டல பொது மேலாளர் ஜெகநாதன், மேலாளர் சுப்பிரமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், இந்தியாவில்
 

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், இந்தியாவில் ஆன்மிக சுற்றலா தரிசனத்துக்கு சிறப்பு ரயில் சேவையை ஐ.ஆர்.சி.டி.சி இயக்கி வருகிறது.தென் மண்டலத்தில் இருந்து இதுவரை 370 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன இதில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

திருநெல்வேலியில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சென்னை வழியாக ராமாயண  யாத்திரை ரயில் இயக்கப்பட உள்ளது என்று ஐ.ஆர்.சி.டி.சி தென் மண்டல பொது மேலாளர் ஜெகநாதன், மேலாளர் சுப்பிரமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், இந்தியாவில் ஆன்மிக சுற்றலா தரிசனத்துக்கு சிறப்பு ரயில் சேவையை ஐ.ஆர்.சி.டி.சி இயக்கி வருகிறது.தென் மண்டலத்தில் இருந்து இதுவரை 370 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன இதில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு நேரில் சென்று பார்க்கும் வகையில் ராமாயண யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் மார்ச் 5ம் தேதி திருநெல்வேலியில் புறப்பட்டு மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம் வழியாக பயணிக்க உள்ளது. சீதா குகை, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சித்திரைக்கூடம், சீதை பிறந்த இடம், ராம ஜென்ம பூமி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். மொத்தம் 13 நாட்கள் பயணத்துக்கு ரூ.15,999 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரயில் கட்டணம், சுற்றிப் பார்க்க வாகன வசதி, தங்கும் வசதி, தென்னிந்திய வைச உணவு ஆகியவை அடங்கும்.

டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் புண்ணிய யாத்திரை செல்ல மானிய விலையில் டிக்கெட் வழங்கி வருகின்றன. இதன் அடிப்படையில் ஏராளமானோர் தென்னிந்தியாவுக்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டுள்ளனர். இதுபோன்று மானிய, இலவச பயணத்துக்கு நிதி உதவி வழங்கும்படி தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். தமிழக அரசு இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்தால் இலவசமாக மக்கள் புண்ணிய தளங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்” என்றனர்.