×

திருச்செந்தூர் கோவில்.. சிறப்பு தரிசனத்தில் செல்பவர்களுக்கு லட்டு,இலை விபூதி பிரசாதம் வழங்க முடிவு!

இக்கோயில் குரு ஸ்தலமாக விளங்குவதால், தினமும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இக்கோயில் குரு ஸ்தலமாக விளங்குவதால், தினமும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் இங்கு கூட்டம் கலைக்கட்டும். உள்ளூர் மட்டுமில்லாது வெளியூர்களிலிருந்தும் வந்து மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் சிறப்புத் தரிசனத்துக்கு ஒரு நபருக்கு ரூ.250 வசூலிக்கப்பட்டு
 

இக்கோயில் குரு ஸ்தலமாக விளங்குவதால், தினமும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இக்கோயில் குரு ஸ்தலமாக விளங்குவதால், தினமும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் இங்கு கூட்டம் கலைக்கட்டும். உள்ளூர் மட்டுமில்லாது வெளியூர்களிலிருந்தும் வந்து மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த கோவிலில் சிறப்புத் தரிசனத்துக்கு ஒரு நபருக்கு ரூ.250 வசூலிக்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலங்களை முன்னிட்டு கட்டணம் அவ்வப்போது உயர்த்தப்படும். கடந்த மாதம் பொங்கல் பண்டிகையின் போது கூட கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது.ரூ.250 கட்டண சிறப்புத் தரிசனத்தில் செல்லும் மக்கள் தங்களுக்கு  இலை விபூதி அடங்கிய கோவில் பிரசாதங்கள் வழங்குமாறு நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வந்தனர்.  

அதனால் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகச் சிறப்புத் தரிசனத்தில் செல்லும் மக்களுக்கு பிரசாதம் வழங்க அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி கேட்கப் பட்டது. அதற்கு அவர் அனுமதி கொடுத்ததன் பேரில், கொடிமரத்தில் வைத்து ஒரு லட்டு மற்றும் இலை விபூதி பிரசாதம் வழங்க அக்கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் தொடக்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.