×

திருச்செந்தூர் கோவிலில் போலி சிலை: பக்தர்கள் அதிர்ச்சி!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்த பழங்கால மயில் சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்த பழங்கால மயில் சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முருகனின் படைவீடுகளில் இரண்டாம் படை வீடாக கருதப்படுவது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர். இந்த திருச்செந்தூர் முருகன் கோவில் கருவறை எதிரே முருகனின் வாகனமான மயில் சிலை வைக்கப்பட்டிருந்தது. 2017 ஆம் ஆண்டு பழங்கால இந்த மயில் சிலையை அகற்றிய விஷமிகள் சிலர் அதற்குப் பதிலாக வேறு
 

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்த பழங்கால மயில் சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்த பழங்கால மயில் சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முருகனின் படைவீடுகளில் இரண்டாம் படை வீடாக கருதப்படுவது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள  திருச்செந்தூர். இந்த  திருச்செந்தூர் முருகன் கோவில் கருவறை எதிரே முருகனின் வாகனமான மயில் சிலை வைக்கப்பட்டிருந்தது. 2017 ஆம் ஆண்டு பழங்கால இந்த மயில் சிலையை அகற்றிய விஷமிகள் சிலர் அதற்குப் பதிலாக வேறு சிலையை வைத்துள்ளனர். ஆனால்  சமீபத்தில் மூலவருக்கு எதிரில் உள்ள மயில் சிலையை மாற்றி போலி சிலையை வைத்ததாகத் தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் பழங்கால மயில் சிலையே அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த குளறுபடியின் போது, மயில் சிலை சேதமாகியுள்ளது. 

இதையடுத்து இது தொடர்பாகத் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில்  பொன்.மாணிக்கவேல்  நேரில் சென்று  விசாரணை நடத்தினார். அப்போது சிசிடிவி கேமராக்களை துண்டித்து விட்டு இந்த சிலையை மாற்றும் செயலில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது.

இதனை காரணமாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, காவல் பணியாளர்கள் சுவாமிநாதன், ராஜகுமார், சுரேஷ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தவும் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவெடுத்துள்ளனர்.