×

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த இளைஞர் டிஸ்சார்ஜ்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இருப்பினும் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் இன்று குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா
 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இருப்பினும் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் இன்று குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது குறித்து பேசிய மருத்துவமனை டீன் வனிதா, அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மனம் தளராமல் தீவிர சிகிச்சை அளித்து வந்தோம். அதன் பலனாக அவர் குணமடைந்து விட்டார் என்று கூறியுள்ளார்.