×

திமுக கூட்டணிக்கு கமல் வரவேண்டும்: கே.எஸ்.அழகிரி அழைப்பு!

திமுக கூட்டணிக்கு கமல் ஹாசன் வரவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை: திமுக கூட்டணிக்கு கமல் ஹாசன் வரவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்குச் சென்று கே.எஸ். அழகிரி மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நாட்டின் இறையாண்மை, மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவது தான் திமுக கூட்டணி கட்சிகளின் நோக்கமாக உள்ளது. எனவே, திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள்
 

திமுக கூட்டணிக்கு கமல் ஹாசன் வரவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை: திமுக கூட்டணிக்கு கமல் ஹாசன் வரவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்குச் சென்று கே.எஸ். அழகிரி மரியாதை செலுத்தினார்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நாட்டின் இறையாண்மை, மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவது தான் திமுக கூட்டணி  கட்சிகளின் நோக்கமாக உள்ளது. எனவே, திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் வரவேண்டும்’என்றார்.

 

முன்னதாக திமுகவை அழுக்குப் பொதி என்று கூறிய கமலை  அக்கட்சியின் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் விடுத்துள்ள அறிக்கையில், கூட்டணிக்காக, காங்கிரஸ் கட்சிக்கு தூதுவிட்டு அது நடக்காததால் திமுக மீது கமல் புழுதிவாரி தூற்றுவது, அவரது அரசியல் கத்துக்குட்டித் தனத்தை காட்டுகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.