×

தினம், தினம் செத்துக் கொண்டிருக்கும் அபிராமி; சுந்தரத்துக்கும் கொலைக்கும் தொடர்பு?தினம், தினம் செத்துக் கொண்டிருக்கும் அபிராமி; சுந்தரத்துக்கும் கொலைக்கும் தொடர்பு?

சென்னை: குழந்தைகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அபிராமி, நடந்ததை நினைத்து இரவு முழுவதும் தூங்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை குன்றத்தூரை சேர்ந்த வங்கி பணியாளரான விஜய் என்பவரின் மனைவி அபிராமி. இவருக்கும் அப்பகுதியில் பிரியாணி கடை வைத்திருக்கும் சுந்தரம் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. தனது காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மற்றும் இரு குழந்தைகளை கொலை
 

சென்னை: குழந்தைகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அபிராமி, நடந்ததை நினைத்து இரவு முழுவதும் தூங்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை குன்றத்தூரை  சேர்ந்த வங்கி பணியாளரான  விஜய் என்பவரின் மனைவி அபிராமி. இவருக்கும் அப்பகுதியில் பிரியாணி கடை வைத்திருக்கும் சுந்தரம் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.  இதன் காரணமாக கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. தனது காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்ட அபிராமி, பாலில் விஷம் வைத்து அவர்களுக்கு கொடுத்துள்ளார். அதில், கணவர் உயிர் தப்பிதுக் கொள்ள இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து, தலைமறைவான அபிராமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அபிராமி மற்றும் சுந்தரம் மீது கொலை, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் சிறையில் யாருடனும் பேசாமல் இருந்த அபிராமி, பின்னர் சக கைதிகளுடன் சகஜமாக பேசத் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல், அவருக்கு தேவையான கவுன்சலிங்கும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அபிராமியை சிறையில் சந்தித்த வழக்கறிஞரிடம், சுந்தரத்தின் பழக்கத்தை தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் அவர் சொல்படி நடந்ததாகவும், அவருடன் சேர்ந்து வாழ விருப்பப்பட்டுதான் அந்தத் தவறை செய்து விட்டதாகவும் அபிராமி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், குழந்தைகள் கொலையில் சுந்தரத்துக்கு தொடர்பில்லை எனவும், மேலும், நடந்த சம்பவத்தை தன்னால் மறக்க முடியாமல் ஒவ்வொரு நாள் இரவும் தூங்க முடியாமல் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறேன் எனவும், ஒருவாரம் கழித்து வாருங்கள் உண்மையை கூறுகிறேன் என வழக்கறிஞரிடம் அபிராமி கூறி அனுப்பியதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.