×

தினமும் 5 ஆயிரம் செலவில் இலவச மூலிகை டீ கொடுக்கும் நபர்! குவியும் பாராட்டு!

இதனால் வேலை வாய்ப்பை இழந்துள்ள ஜக்குபாய் கொரோனா நடவடிக்கையில் வருவோருக்கு மூலிகை டீயை இலவசமாக கொடுத்து வருகிறார். கோவை அன்னூர் புளியம்பட்டி பகுதியை சேர்ந்த மாஸ்டர் ஜக்குபாய் என்பவர் திருமண விழாக்களில் மூலிகை டீ ஆர்டர் எடுத்து விநியோகம் செய்யும் பணியை செய்து வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கி போயுள்ளனர். ஏற்கனவே முடிவான திருமணங்கள் தள்ளி போனதோடு, சிலர் வீடுகளிலேயே எளிமையான திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். இதனால் வேலை வாய்ப்பை இழந்துள்ள ஜக்குபாய்
 

இதனால் வேலை வாய்ப்பை இழந்துள்ள ஜக்குபாய் கொரோனா நடவடிக்கையில்  வருவோருக்கு மூலிகை டீயை இலவசமாக கொடுத்து வருகிறார். 

கோவை அன்னூர் புளியம்பட்டி பகுதியை சேர்ந்த  மாஸ்டர் ஜக்குபாய் என்பவர்  திருமண விழாக்களில் மூலிகை டீ ஆர்டர் எடுத்து விநியோகம் செய்யும் பணியை செய்து வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கி போயுள்ளனர். ஏற்கனவே முடிவான திருமணங்கள் தள்ளி போனதோடு, சிலர் வீடுகளிலேயே எளிமையான திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். இதனால் வேலை வாய்ப்பை இழந்துள்ள ஜக்குபாய் கொரோனா நடவடிக்கையில்  வருவோருக்கு மூலிகை டீயை இலவசமாக கொடுத்து வருகிறார். 

அதாவது அன்னூரில்  பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் , அரசு ஊழியர்கள் என தினமும் 2 ஆயிரம் பேருக்கு இலவமாக டீ கொடுத்து வருகிறார். இந்த மூலிகை டீயில் கோவக்காய், நெல்லிக்காய், மாங்காய், சுக்கு, மிளகு, திப்பிலி என மொத்தம் 82 விதமான பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. 

தினமும் 5 ஆயிரம் செலவு செய்து இந்த மூலிகை டீயை தயாரிக்கும் ஜக்குபாய்க்கு அப்பகுதி மக்கள்தங்கள் அன்பையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.