×

திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி வரும்; செல்லூர் ராஜூக்கு டப் கொடுக்கும் ராஜேந்திர பாலாஜி

திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி வரும் என்பதால், மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி வரும் என்பதால், மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதிமுக அமைச்சர்கள் ஏடாகூடமாய் எதாவது செய்து விமர்சனத்தை சந்திப்பது வழக்கமாகி விட்டது. அமைச்சர் செல்லூர் ராஜா தெர்மாகோல் மிதக்கவிட்டு
 

திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி வரும் என்பதால், மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி வரும் என்பதால், மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதிமுக அமைச்சர்கள் ஏடாகூடமாய் எதாவது செய்து விமர்சனத்தை சந்திப்பது வழக்கமாகி விட்டது. அமைச்சர் செல்லூர் ராஜா தெர்மாகோல் மிதக்கவிட்டு பேமஸ் ஆனதுபோல், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள ஆகிலாபுரத்தில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இதில் அவர், அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. மது குடிப்பவர்கள் உடனே குடியை நிறுத்தினால், நரம்புத்தளர்ச்சி ஏற்படும். அதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. மது குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாக்கவே நாங்கள் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்தாமல் இருக்கிறோம். படிப்படியாக, மதுவிலக்கைக் கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜியின் கருத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அமைச்சர் செல்லூர் ராஜூக்கு டப் கொடுக்க இன்னொரு அமைச்சர் கிடைத்துவிட்டார் என பதிவு செய்கிறார்கள்.