×

தம்பி தற்கொலையால் அதிர்ச்சி… அதே ஃபேனில் அண்ணனும் தற்கொலை! காசிமேட்டில் சோகம்

ஆகாஷ் தன்னுடைய நண்பர் ஒருவருக்கு “ஹாய் பிரெண்ட், நான் இந்த உலகத்தை விட்டுப் போகிறேன். என் குடும்பத்தை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். இதைக் கண்ட அந்த நபர் பதறியடித்து ஆகாஷுக்கு போன் செய்துள்ளார். ஆனால், போன் சுவிச்டு ஆஃப் என்று வந்துள்ளது. இதனால், அனிஷுக்கு தகவல் தெரிவித்துவிட்டு வேகவேகமாக வீட்டுக்கு வந்துள்ளார். ஆகாஷின் அறைக்கு சென்று பார்த்தபோது, அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவு திறக்காததால் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு
 

ஆகாஷ் தன்னுடைய நண்பர் ஒருவருக்கு “ஹாய் பிரெண்ட், நான் இந்த உலகத்தை விட்டுப் போகிறேன். என் குடும்பத்தை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். இதைக் கண்ட அந்த நபர் பதறியடித்து ஆகாஷுக்கு போன் செய்துள்ளார். ஆனால், போன் சுவிச்டு ஆஃப் என்று வந்துள்ளது. இதனால், அனிஷுக்கு தகவல் தெரிவித்துவிட்டு வேகவேகமாக வீட்டுக்கு வந்துள்ளார். ஆகாஷின் அறைக்கு சென்று பார்த்தபோது, அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவு திறக்காததால் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியிருந்தார்.

சென்னை காசிமேடு காசிமாநகரைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு அனிஷ் என்கிற இருதயராஜ் (29), ஆரோக்கிய ஆகாஷ் (24) என இரண்டு மகன்கள் இருந்தனர். அனிஷ் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஆகாஷ் பி.இ முடித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றிவந்துள்ளார்.
ஆகாஷ் தன்னுடைய நண்பர் ஒருவருக்கு “ஹாய் பிரெண்ட், நான் இந்த உலகத்தை விட்டுப் போகிறேன். என் குடும்பத்தை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். இதைக் கண்ட அந்த நபர் பதறியடித்து ஆகாஷுக்கு போன் செய்துள்ளார். ஆனால், போன் சுவிச்டு ஆஃப் என்று வந்துள்ளது. இதனால், அனிஷுக்கு தகவல் தெரிவித்துவிட்டு வேகவேகமாக வீட்டுக்கு வந்துள்ளார்.
ஆகாஷின் அறைக்கு சென்று பார்த்தபோது, அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவு திறக்காததால் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியிருந்தார்.
உடனடியாக கீழே இறக்கி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறினர். இதனால் அனிஷ் மனம் உடைந்தார். தம்பியின் முகத்தையே வெறித்துப் பார்த்தபடி இருந்துள்ளார். போலீசார் வந்து உடலை ஆய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உடன் அங்கிருந்து புறப்பட்ட அனிஷ் நேராக வீட்டுக்கு வந்துள்ளார். தம்பி இறந்த அறைக்குச் சென்று அந்த மின்விசிறியையே நீண்ட நேரம் பார்த்துள்ளார். அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ஆனாலும் அவர் அமைதியடையவில்லை. எல்லோரும் வெளியேறிய பிறகு அவரும் கதவைப் பூட்டிக்கொண்டு அதே ஃபேனில் தூக்கு மாட்டிக்கொண்டார்.

நீண்ட நேரம் ஆகியும் அனிஷ் வராததால் அவரை தேடியுள்ளனர். மீண்டும் அந்த அறை பூட்டப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்தவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு அனிஷ் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். உடனே அவரை கீழே இறக்கி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். ஒரே நாளில் இரண்டு மகன்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதால் அந்த குடும்பமே நிலைகுலைந்து போய்விட்டது. இருவரின் உடலும் உடற்கூறு ஆய்வு முடித்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.