×

தமிழகம் முழுவதும் ஏழை, எளிய குடும்பத்தினருக்கு ரூ.2000 சிறப்பு நிதி

தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார் சென்னை: தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 2019-20-ஆம் நிதிஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் கடந்த 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதனை தாக்கல் செய்தார். இதையடுத்து,
 

தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்

சென்னை: தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

2019-20-ஆம் நிதிஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் கடந்த 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதனை தாக்கல் செய்தார். இதையடுத்து, மீதான பொது விவாதம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அப்போது, தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். கஜா புயல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கைத்தறி தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் 35 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களும், நகர்புறங்களில் 25 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும் பயன்பெறும் என தெரிவித்த முதல்வர், சிறப்பு நிதி வழங்குவதற்காக ரூ1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.