×

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு !

கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில் கடும் குளிரும் பகல் நேரத்தில் வெயிலும் நிலவியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் முடிந்தது. ஆனால், இந்த மாதமும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன் படி, இந்த மாதம் 10 ஆம் தேதியோடு வடகிழக்கு பருவமழை நிறைவடைந்தது. இதன் பின்னர் மழை பெய்தால் அது குளிர்கால மழையாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில் கடும் குளிரும்
 

கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில் கடும் குளிரும் பகல் நேரத்தில் வெயிலும் நிலவியது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் முடிந்தது. ஆனால், இந்த மாதமும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன் படி, இந்த மாதம் 10 ஆம் தேதியோடு வடகிழக்கு பருவமழை நிறைவடைந்தது. இதன் பின்னர் மழை பெய்தால் அது குளிர்கால மழையாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில் கடும் குளிரும் பகல் நேரத்தில் வெயிலும் நிலவியது. 

இந்நிலையில் நேற்று இரவு திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதே போல, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி,ஆரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் நள்ளிரவு மழை வெளுத்து வாங்கியது. புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் இன்று காலை வரை மழை விட்டு விட்டுப் பெய்தது. மேலும், சென்னையின் ஒரு சில இடங்களில் இன்று காலை சாரல் மழை பெய்தது. இதனிடையே, வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.