×

தமிழகத்தில் மேலும் 64பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1885 ஆக உயர்வு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29லட்சத்தை கடந்துள்ளது. இரண்டு லட்சம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 1821 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மேலும் 64பேருக்கு
 

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29லட்சத்தை கடந்துள்ளது. இரண்டு லட்சம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 1821 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

 

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மேலும் 64பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1885 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இதுவரை 79,586 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.இன்று மட்டும் 60-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் 1020 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என தெரிவித்தார்.