×

தமிழகத்தில், மணல் கடத்தலில் அதிகாரிகளின் பங்கு |வெளியான வீடியோ ஆதாரம்!

தமிழகத்தில் ஏற்கெனவே எண்பது சதவிகித ஆறுகள் எல்லாம் தண்ணீர் இல்லாமல் வறண்ட பாலைவனமாக மாறி வருகிறது. ஒவ்வொரு வருட கோடை காலத்திலும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று தண்ணீருக்காக கையேந்தி அல்லாடுகிறோம். வருண பகவான் புண்ணியத்தில், மழை அடுத்த மாநிலத்தில் கருணைக்காட்டி அவர்கள் திறந்து விடுகிற தண்ணீர் தான் நமது மாநிலத்தின் நீர் ஆதாரமாக மாறிவிட்டது. இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கொமேஸ்வரம் பகுதியில், பாலாற்றில் மணல் கொள்ளை நடப்பதாக வீடியோ ஆதாரத்துடன் அப்பகுதி மக்கள்
 
தமிழகத்தில் ஏற்கெனவே எண்பது சதவிகித ஆறுகள் எல்லாம் தண்ணீர் இல்லாமல் வறண்ட பாலைவனமாக மாறி வருகிறது. ஒவ்வொரு வருட கோடை காலத்திலும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று தண்ணீருக்காக கையேந்தி அல்லாடுகிறோம். வருண பகவான் புண்ணியத்தில், மழை அடுத்த மாநிலத்தில் கருணைக்காட்டி அவர்கள் திறந்து விடுகிற தண்ணீர் தான் நமது மாநிலத்தின் நீர் ஆதாரமாக மாறிவிட்டது. இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கொமேஸ்வரம் பகுதியில், பாலாற்றில் மணல் கொள்ளை நடப்பதாக வீடியோ ஆதாரத்துடன் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

மணல் கடத்துபவர்களுக்கு ஆறுகளில் நீர் இல்லாதது இன்னும் வசதியாக போனது. அதிகாரிகளும் மணல் கடத்தலுக்கு துணை போவதால், யாரைப் பற்றிய பயமும் இல்லாமல் தினமும் நள்ளிரவுகள் இந்த மணல் கடத்தல் அராஜகம் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தினமும் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மாட்டு வண்டிகள் மணல் திருட்டுக்கு படையெடுக்கின்றன. பாலாற்றில் இருந்து மணலைத் திருடி வந்து, மாட்டு வண்டிகளில் இருக்கும் மணலை, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மறைவான பகுதிகளில் குவித்து வைக்கின்றனர். அங்கிருந்து தைரியமாக டிராக்டர்களிலும், லாரிகளிலும் குவிக்கப்பட்டு இருக்கும் மணல் ஏற்றப்பட்டு கடத்தி செல்லப்படுகின்றது. இந்த மணல் திருட்டை கிராம நிர்வாக அலுவலரும் கண்டுக் கொள்வதில்லை. தேசிய நெடுஞ்சாலை காவல் துறையும் கண்டுக் கொள்வதில்லை. மாவட்ட ஆட்சியரும் அக்கறைக் காட்டுவதில்லை. ஒரு யூனிட் மணலை மாட்டு வண்டிக்காரர்களிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கும்  லாரி உரிமையாளர்கள், தங்கள் வண்டியில் 10 யூனிட் மணலை கடத்திச் சென்று 40 ஆயிரம் ரூபாய் வரை விலை வைத்து விற்று வருகிறார்கள்.

இந்த மணல் கடத்தலுக்கு உள்ளூர் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உடந்தையாக இருப்பதாக குற்றஞ்சாட்டும் அந்தபகுதி மக்கள், அனைவருக்கும் மாதந்தோறும் மாமூல் செல்வதால் யாரும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். இதை மீறி தொடர்ச்சியாக புகார் செய்யும் நபர்களை மணல் கடத்தல் கும்பல் மிரட்டி வருவதாகவும் தெரிவித்தனர்.
உயிரைப் பணயம் வைத்து அப்பகுதி மக்கள் மணல் கடத்தல் காட்சிகளை வீடியோவாக படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது பாழாகும் பாலாற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!