×

தமிழகத்தில் பாஜக – அதிமுக தோல்விக்கு காரணம் இவர்கள் தான்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை: மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் பாஜக அரசு அதிக இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனால் மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராக பதவியேற்கிறார். வரும் 30 ஆம் தேதி மாலை 7 மணிக்கு ராஷ்டிரபதி பவனில், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன்
 

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி  மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை:  மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி  மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் பாஜக அரசு அதிக இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனால் மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராக பதவியேற்கிறார்.  வரும் 30 ஆம் தேதி மாலை 7 மணிக்கு ராஷ்டிரபதி பவனில், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குக் குடியரசுத் தலைவர்  ராம்நாத்  கோவிந்த்  பதவிப் பிரமாணம்  செய்துவைக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன்  உள்ளிட்ட சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தர்பார் படப்பிடிப்பிலிருந்த ரஜினிகாந்த் தற்போது சென்னை திரும்பியுள்ளார். அப்போது  போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களைச்  சந்தித்த அவர், ‘நேரு, இந்திரா, வாஜ்பாய், ராஜீவிற்கு பிறகு வசீகரமான தலைவராகப் பிரதமர் மோடி இருக்கிறார். அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி மோடி என்ற தனிமனிதனுக்குக்  கிடைத்த வெற்றி’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியது. அதனால் தான் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது.   தமிழகத்தில்  மீத்தேன்,  ஸ்டெர்லைட்,  நீட்  உள்ளிட்டவற்றைக்  கொண்டு வந்தது, எதிர்க்கட்சிகளின்  சூறாவளிப் பிரசாரம் ஆகியவை தமிழ்நாட்டில் பாஜக தோற்கக் காரணமாகி விட்டது.  அதிமுக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்தனர். அது தான் அக்கட்சியின் தோல்விக்கு காரணம். அதே சமயம் மத்தியில்  ஆளும் கட்சியைப் போல எதிர்க்கட்சியும் அவசியம் என்பதால் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் பதவி விலகக் கூடாது’ என்று கூறினார். 

‘இறுதியாகக் கோதாவரி – கிருஷ்ணா – காவிரி நதிநீர் இணைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகள் வாங்கிய கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளையும்’ ரஜினி தெரிவித்துக் கொண்டார்.