×

தமிழகத்தில் நாளை அதிகாலை 5 மணி வரை சுய ஊரடங்கு நீட்டிப்பு – புதிய அறிவிப்பு

தமிழகத்தில் நாளை அதிகாலை 5 மணி வரை சுய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் நாளை அதிகாலை 5 மணி வரை சுய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அண்மையில் அழைப்பு விடுத்தார். அதையடுத்து இன்று பிரதமர் மோடியின் அழைப்புக்கு
 

தமிழகத்தில் நாளை அதிகாலை 5 மணி வரை சுய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் நாளை அதிகாலை 5 மணி வரை சுய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அண்மையில் அழைப்பு விடுத்தார். அதையடுத்து இன்று பிரதமர் மோடியின் அழைப்புக்கு பணிந்த இந்திய மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர்.

இதனால் நாட்டின் தேசிய சாலைகள், நகர சாலைகள், கிராம தெருக்கள் உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. கடைகளும் விடுமுறை அறிவித்து விட்டன. ஆனால் நாட்டில் உள்ள முக்கியமான நகரங்களில் சில பேர் ஊரடங்கை கடைபிடிக்காமல் ஆங்காங்கே சுற்றித் திரிந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் நாளை (மார்ச் 23) அதிகாலை 5 மணி வரை சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.