×

தமிழகத்தில் நாளை 5,300 டாஸ்மாக் கடைகள் திறப்பு! மதுவாங்க அதார் கார்டு தேவையில்லை- உச்சநீதிமன்றம்

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து அனைத்து டாஸ்மாக் மற்றும் மதுக்கடைகளும் மூடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக கடந்த 7 ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து அனைத்து டாஸ்மாக் மற்றும் மதுக்கடைகளும் மூடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக கடந்த 7 ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில்
 

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து அனைத்து டாஸ்மாக் மற்றும் மதுக்கடைகளும் மூடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக கடந்த 7 ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து அனைத்து டாஸ்மாக் மற்றும் மதுக்கடைகளும் மூடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக கடந்த 7 ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டது. ஆனால் அந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால் கடந்த 8 ஆம் தேதி மதுக்கடைகளை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.  உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தது. மேலும் மதுக்கடைகளுக்கு வருவோர் ஆதார் கார்டுகளை எடுத்து வரவேண்டும் என்பது உள்ளிட்ட உயர்நீதிமன்றம் விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் தளர்த்தியுள்ளது. 

இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளைத் தவிரப் பிற இடங்களில் என மொத்தம் 5300 டாஸ்மாக் கடைகளை நாளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது சிவப்பு மண்டலங்களை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற விதிகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி, காவல் ஆணையர்களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும் 550 பேர் மட்டுமே வரிசையில் நிற்கவேண்டும் மற்றவர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.