×

தமிழகத்தில் குவியும் வட மாநிலத்தவர்கள்…. பயணங்களைத் தவிர்த்திட வேண்டுகோள்விடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

இந்தியாவின் வெப்பநிலை காரணமாக கொரோனா வைரஸ் பரவாது என்று அலட்சியமாக இருந்த நிலை மாறிவிட்டது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165ஐ தாண்டிவிட்டது. உண்மையில் இதை விட அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா குணமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் இரண்டு வாரத்துக்கு பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் வெப்பநிலை காரணமாக கொரோனா
 

இந்தியாவின் வெப்பநிலை காரணமாக கொரோனா வைரஸ் பரவாது என்று அலட்சியமாக இருந்த நிலை மாறிவிட்டது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165ஐ தாண்டிவிட்டது. உண்மையில் இதை விட அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்து  வருகின்றனர். தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா குணமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள் இரண்டு வாரத்துக்கு பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் வெப்பநிலை காரணமாக கொரோனா வைரஸ் பரவாது என்று அலட்சியமாக இருந்த நிலை மாறிவிட்டது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165ஐ தாண்டிவிட்டது. உண்மையில் இதை விட அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்து  வருகின்றனர். தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா குணமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு விஜயபாஸ்கர் கூறியதாவது:
“தமிழகத்தில் அனைத்து விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் முழு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட மருத்துவமனைகளில் தனிமைப்படத்தப்பட்ட அறைகள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளிலும் தனி அறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. தாமாக முன்வந்து அவர்கள் இதை செய்கிறார்கள். 
சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொறியாளர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். அவருடைய நலன் கருதி, அவர் யார், எங்கு உள்ளார் என்ற தகவலை வெளியிட விரும்பவில்லை. 

அரசு தரப்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் விடுக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான். இதை மட்டும் செய்யுங்கள் போதும். இரண்டு வாரங்களுக்கு பொது மக்கள் பயணங்களில் ஈடுபட வேண்டாம். அதற்காகவே சுற்றுலா, மால் போன்ற தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு பயணிகள் வந்துகொண்டே இருக்கின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. இதனால் சிறப்பு ரயில்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது 40 சதவிகித மக்கள் தாங்களாக முன்வந்து டிக்கெட்களை ரத்து செய்து வருகின்றனர். மற்றவர்களும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்றார்.