×

தமிழகத்தில் ஏப்.14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! ஆனா ஒரு கண்டிஷன் – முதலமைச்சர் பழனிசாமி

ஊரடங்கு உத்தரவு தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், “கர்ப்பிணிப் பெண்கள், காசநோய், எச்.ஐ.வி, நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வழங்க ஆணை. அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைப்பதை குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வட்டியை வசூலிக்க தடை, மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயம் தொடர்பான எந்த போக்குவரத்துக்கும் தடையில்லை. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ”அத்தியாவசிய தேவைக்காக”
 

ஊரடங்கு உத்தரவு தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், “கர்ப்பிணிப் பெண்கள், காசநோய், எச்.ஐ.வி, நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வழங்க ஆணை. அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைப்பதை குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வட்டியை வசூலிக்க தடை, மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயம் தொடர்பான எந்த போக்குவரத்துக்கும் தடையில்லை. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ”அத்தியாவசிய தேவைக்காக” என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும். கால்நடை, கோழி, மீன், முட்டை உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதற்கு தடையில்லை. ஊபர், ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு தடை தொடர்கிறது. அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளிவிட்டு நின்றே பொருள்களை வாங்க வேண்டும்.உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கான நேர வரம்பு எதும் குறைக்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.