×

தமிழகத்தில் இன்றுடன் முடிவடைகிறது வடகிழக்கு பருவமழை !

வடகிழக்கு பருவமழை துவங்கிய நாள் முதலே, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது. பொதுவாக அக்டோபர் – டிசம்பர் வரை பருவமழை காலமாகக் கருதப்படும். வடகிழக்கு பருவமழை துவங்கிய நாள் முதலே, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப் பட்டதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

வடகிழக்கு பருவமழை துவங்கிய நாள் முதலே, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது. பொதுவாக அக்டோபர் – டிசம்பர் வரை பருவமழை காலமாகக் கருதப்படும். வடகிழக்கு பருவமழை துவங்கிய நாள் முதலே, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப் பட்டதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் இறுதி வரை கணக்கிடப்படும். அதன் படி, இன்றுடன் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடைகிறது. இதன் பிறகு மழை பெய்தால், அது குளிர்கால மழையாகக் கருதப்படும். இதனிடையே, காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் இந்த ஆண்டு சென்னையில் இயல்பாகப் பெய்யும் மழையை விட 19% சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.