×

தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கடந்த சில நாட்களாக மக்களை வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து 26 ஆம் தேதி காலை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையின் முக்கிய இடங்களான
 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  

கடந்த சில நாட்களாக மக்களை வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து 26 ஆம் தேதி காலை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பல பகுதிகளில்  இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையின் முக்கிய இடங்களான அண்ணாநகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம், அமைந்தகரை, சேத்துப்பட்டு பகுதிகளில் தொடர்ந்து கனமழை மழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளிலும்,  விழுப்புரம் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் மணம்பூண்டி. அரகண்டநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வந்தது. அதே போல தமிழகத்தின் மற்ற சில இடங்களிலும் லேசான மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து காலை முதல் குளிர்ச்சி நிலவி வருகிறது, வெயிலின் தாக்கம் இல்லாததால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.