×

தமிழக தொல்லியல் துறையில் தமிழே தெரியாத ஊழியர்கள்!

தஞ்சாவூர் மாதிரி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்திற்கு வரும் சுற்றுலா பயணி அந்த இடத்தின் வரலாற்றை குறித்து கேட்டால், அந்த வட மாநில பணியாளர் எப்படி புரியவைப்பார்? முதலில் அவருக்கு அதன் வரலாறு தெரியுமா? ”க்யா? டமில் நஹி மாலும், இந்தி போலோ” என்றல்லவா சொல்லிவிரட்டிவிடுவார்? சென்னை தொல்லியல்துறை வட்டத்தில் ஏறத்தாழ 200 பேர்வரை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர். நினைவுச்சின்னங்களை பாதுகாப்பது, சுற்றுலா பயணிகளுக்கு தொன்மை சின்னங்கள் தொடர்பான
 

தஞ்சாவூர் மாதிரி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்திற்கு வரும் சுற்றுலா பயணி அந்த இடத்தின் வரலாற்றை குறித்து கேட்டால், அந்த வட மாநில பணியாளர் எப்படி புரியவைப்பார்? முதலில் அவருக்கு அதன் வரலாறு தெரியுமா? ”க்யா? டமில் நஹி மாலும், இந்தி போலோ” என்றல்லவா சொல்லிவிரட்டிவிடுவார்?

சென்னை தொல்லியல்துறை வட்டத்தில் ஏறத்தாழ 200 பேர்வரை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர்.  நினைவுச்சின்னங்களை பாதுகாப்பது, சுற்றுலா பயணிகளுக்கு தொன்மை சின்னங்கள் தொடர்பான வரலாற்று தகவல்களை தெரிவிப்பது இவர்கள் பணியாகும். இந்நிலையில், தொல்லியல் துறையில் அவுட்சோர்சிங் நடைமுறையை கொண்டு வந்த மத்திய அரசு, வடமாநிலத்தவர்களுக்கு பணியை வழங்கி, அவர்களுக்கு ரூ.250 வரை தினசரி ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தது.  பணி முறைப்படுத்த வேண்டும், முறையான ஊதிய விகிதம் வழங்க வேண்டும் என்று கேட்டு வந்த  தற்காலிக ஊழியர்களை பணியில் இருந்து கழட்டிவிட்டுவிட்டது.
 

இதை எதிர்த்து வேலூர் உள்ளிட்ட சில வட்டங்களைச் சேர்ந்த பணியாளர்கள் ஒன்று சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையில் கிளாஸ்4 பணியாளர் பிரிவில், ‘பல்நோக்கு பணியாளர்’ என்ற போர்வையில் தொல்லியல்துறையின் டெல்லி தலைமையகத்தில் பணியாணை வழங்கி அவர்கள் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பல்நோக்கு என்றால் புரிகிறதா? டக்கர் அடித்துப்பார்த்தும் வழிக்குவராத தமிழகத்தின் வேலைவாய்ப்புகளை, தனக்கு உகந்த வடக்கத்தவர்களுக்கு கொடுத்துவிடுவதுதான் பல்நோக்கு போலும்? எனக்கு ஒரு சந்தேகம், தஞ்சாவூர் மாதிரி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்திற்கு வரும் சுற்றுலா பயணி அந்த இடத்தின் வரலாற்றை குறித்து கேட்டால், அந்த வட மாநில பணியாளர் எப்படி புரியவைப்பார்? முதலில் அவருக்கு அதன் வரலாறு தெரியுமா? ”க்யா? டமில் நஹி மாலும், இந்தி போலோ” என்றல்லவா சொல்லிவிரட்டிவிடுவார்?